← Back to list
வாகன கண்ணாடிகளின் Tint விகிதம்..
Jul 08, 2025

வாகன சோதனையில் கருப்புக் கண்ணாடி விதிமுறைகள் குறித்துத் தவறான தகவல்களைப் பகிரும் நிறுவனங்களை PUSPAKOM எச்சரித்துள்ளது!
Puspakom தரநிலைகளுக்கேற்ற கருப்புக் கண்ணாடி அல்லது tint அளவு என்ற ஒன்று இல்லை.
வாகன ஜன்னல் கண்ணாடிகளின் Tint விகிதம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை, சாலை போக்குவரத்துத் துறை தான் நிர்ணயிக்கிறது.
Puspakom-மின் சோதனையைக் கடக்க இரு தரநிலைகளிலான கருப்புக் கண்ணாடி விதிகம் இருப்பதாகக் கூறி, பிரபல tint நிறுவனம் ஒன்று வெளிட்டிருந்த உத்தரவாத அட்டை தொடர்பில் அது அவ்விளக்கத்தைக் கொடுத்தது.
------
முன்னாள் பிரதமர் DS Ismail Sabri Yaakobபுக்குச் சொந்தமான 169 மில்லியன் ரிங்கிட் பணத்தை பறிமுதல் செய்ய, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் விண்ணப்பித்துள்ளது!
2009 மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய சட்டத்தின் கீழ் அந்த விண்ணப்பம் முன்வைக்கப்பட்டுள்ளது.
Ismail Sabriயின் முன்னாள் அரசியல் செயலாளரிடம் இருந்த அப்பணம், அதே சட்டத்தில் உள்ள குற்றம் ஒன்றின் கீழ் வருவதாக MACCயைப் பிரதிநிதித்த வழிகறிஞர் குறிப்பிட்டார்.
------
அலுவல் பணியாக, இத்தாலி, France, Brazil ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்த பிரதமர் DSAI தாயகம் புறப்பட்டுள்ளார்
நேற்று நள்ளிரவு வாக்கில் அவரையும், அவரது குழுவினரையும் ஏற்றிக் கொண்டு விமானம் Brazilலிலிருந்து புறப்பட்டது.
பிரதமரின் அந்த பயணமானது அந்தந்த நாடுகளுடனான மலேசியாவின் வர்த்தக உறவை வலுப்படுத்த வழிவகுத்துள்ளது.
-------
ஜொகூர், Tebrauவில் வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில், 26 மணி நேர தண்ணீர் விநியோகத் தடை ஏற்படவிருக்கிறது.
பாசீர் கூடாஙில் அமைந்துள்ள Sultan Iskandar நீர் சுத்திகரிப்பு ஆலையில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் அந்நிலை ஏற்படுகின்றது.
இதில் சுமார் 30 ஆயிரம் பயனர்கள் பாதிக்கப்படுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
----
பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், Kuala Lumpur மற்றும் Putrajayaவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிள்ளது!
அம்மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை பத்து மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, MetMalaysia கணித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather