← Back to list
உயிரிழந்தவர்கள் அடையாளங்காணப்பட்டனர் !
Jul 07, 2025

கெடா Alor Setar-ரில் உள்ள ஆற்றொன்றில் கார் விழுந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் மரணமடைந்த சம்பவம் குறித்து, காவல்துறை இன்னும் விசாரனை நடத்தி வருகின்றது !
அக்கார் வழுக்கி, ஆற்றுக்குள் சென்றிருக்கலாம் என அத்துறை சந்தேகிக்கிறது.
இப்போதைக்கு, வேறு எந்த வாகனங்களும், அச்சம்பவத்தில் தொடர்புடையதாகத் தெரியவில்லை.
மூழ்கிய காரில் இருந்து சடலமாகக் மீட்கப்பட்ட அறுவரின் உடல்கள், அடையாளம் காணப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
பிறந்து ஆறே மாதமான குழந்தையும், அதிலடங்கும்.
உறவினர்களைப் பார்க்கச் சென்ற பிறகு வீடு திரும்பாததால், அக்குடும்பம் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
----------
அரசு ஊழியர்கள் மத்தியில் போலி மருத்துவச் சான்றிதழ்கள் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக CUEPACS தெரிவித்துள்ளது !
எனவே, அதனை தடுக்க டிஜிட்டல் சிகிச்சை விடுப்பு சான்றிதழ் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.
அண்மையில், கெடாவில் இருதய நோயாளி உட்பட மூவர், போலி சான்றிதழ்களைத் தயாரித்து விற்றதை, அது மேற்கோள்காட்டியது.
--------
பள்ளி மானவர்களிடையே ஏற்படும் மனநல பிரச்சனைகளைச் சமாளிக்க, சிலாங்கூர் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது !
சிலாங்கூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலைப்பள்ளி மாணவர்கள், மன அழுத்தத்திற்குள்ளாகும் அபாயத்தில் இருப்பது, அண்மைய ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
-------
JOHOR BAHRU மற்றும் Tebrau-வில், அடுத்த வார செவ்வாய்கிழமை காலை 9 மணி தொடங்கி, மறுநாள் காலை 11 மணி வரை, அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படுகிறது !
அதனால் குடியிருப்புகள், வணிகத் தளங்களை உட்படுத்திய, முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் பாதிக்கப்படும்.
---------
கெடா, பினாங்கு உட்பட, சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என, Met Malaysia தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather