← Back to list
செய்தி | சிலாங்கூரில் மறுசுழற்சி பொருளாதார கட்டமைப்பு!
Jul 07, 2025

சுழற்சி பொருளாதார கட்டமைப்பை இன்னும் ஈராண்டுகளில் அமுல்படுத்த முடியும் என நம்புகிறது சிலாங்கூர் அரசு!
அது Petaling Jaya, Subang Jaya, Shah Alam உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கவுள்ளது.
நகர்புற கட்டமைப்பில் இப்பகுதிகள் இருப்பதால், பரிட்சார்த்த திட்டங்களை அங்கு எளிதாக நடத்த முடியும் என மாநில MB தெரிவித்தார்.
பொருட்களை முடிந்த வரை மறுசுழற்சி செய்து, அவற்றை மேம்படுத்தி, புதிய விதத்தில் பயன்படுத்துவன் மூலம், கழிவுகளைக் குறைத்து வளங்களைப் பாதுகாப்பது பொருளாதார மதிப்பை மேம்படுத்தும்.
அதுவே சுழற்சி பொருளாதாரம் ஆகும்.
------
நெகிழிப்பை அற்ற தினத்தை அமுல்படுத்த, துணை சட்டங்களை இறுதிச் செய்து வருகிறது சிலாங்கூர் அரசு!
அந்த சட்டத் திருத்த வேலைகள் இவ்வாண்டு இறுதியில் நிறைவு பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்தாண்டு தொடக்கத்திலேயே அம்மாநிலத்தின் 12 உள்ளாட்சி அமைப்புகளில் நெகிழி பை அற்ற தினத்தை அமுல்படுத்த முடியும் என, மாநில சுகாதார செயற்குழு தலைவர் தெரிவித்தார்.
-------
விபத்துகளில் ஈடுபட்டிருக்கும் வர்த்தக வாகன ஓட்டுனர்களின் தொழில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்!!
தவறு செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டவர்கள், புதுப்பிப்புப் பயிற்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பின்னர், உரிமம் திருப்பித் தரப்படும்.
ஆனால் காவல் துறையின் விசாரணையில், தவறிழைத்திருப்பது உறுதியானால் உரிமம் உடனடியாக் ரத்து செய்யப்படும் என சாலை போக்குவரத்துத் துறை எச்சரித்தது.
-------
பினாங்கு மலைப்பகுதியின் பல்வேறு இடங்களில், நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் இறந்து கிடக்கக் காணப்பட்ட சம்பவம் தொடர்பில், காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது!
இக்காரியத்தைச் செய்த தரப்பின் முக்கிய இலக்குகளாகத் தெருநாய்கள் இருப்பதாக, பினாங்கு மலைப்பகுதி மாநகராட்சி PHC சந்தேகிக்கிறது.
முன்னதாக மலையேறிகளையும் பார்வையாளர்களையும் அவை தாக்கியதாகக் கூறப்பட்டது.
------
BRICS உச்சநிலை மாநாட்டிற்காக Brazil சென்றுள்ள பிரதமர் DSAI, அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், Ethiopia பிரதமர் Abiy Ahmed Aliயையும் சந்திக்கவுள்ளார்!
மலேசிய நேரப்படி இன்று நடைபெறவிருக்கும் அம்மாநாட்டின் முக்கிய நிகழ்விற்குப் பின்னர், அந்த இருதரப்பு சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather