← Back to list
தலைமை நீதிபதி பொறுப்பை Tan Sri Hasnah ஏற்கிறார்!
Jul 03, 2025

ட்டின் தலைமை நீதிபதி பொறுப்பை தற்காலிகமாக மலாயா தலைமை நீதிபதி Tan Sri Hasnah Mohammed Hashim நிரப்புவார்.
அவர், அப்பொறுப்பிலிருந்து அப்பதவிற்கான அதிகாரங்களையும், கடமைகளையும் செய்வார்.
அம்முடிவு, கூட்டரசு அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு இணங்குவதாக கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி Tun Tengku Maimun Tuan Mat, பதவி காலம் முடிந்து கடந்த புதன்கிழமையோடு கட்டாய ஓய்வு பெற்றார்.
ஆறு வருட காலம் அப்பதவியில் இருந்ததோடு, நாட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண் என்ற வரலாற்று பெருமையும் அவரைச் சேரும்.
-------
சிலாங்கூர், Cyberjaya பல்கலைக்கழக மாணவி கொலை வழக்கு தொடர்பில் கைதான மூவரின் தடுப்புக் காவல், மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது!
இன்று முடியவிருந்த அவர்களது தடுப்புக் காவல், நாளை தொடங்கி அடுத்த வாரம் வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்படுவதாக Majistret நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாணவியின் வீடு புகுந்து கொள்ளை அடித்ததோடு, அவரை கொலையும் செய்த சந்தேகத்தின் பேரில், அம்மாணவி உடன் தங்கியிருந்த மற்றொரு மாணவியின் காதலன், முதன்மை சந்தேக நபராகக் கைதானான்.
இரு மாணவிகள் உட்பட மொத்தம் நால்வர் இச்சம்பவம் தொடர்பில் கைதாகினர்.
-------
வெப்ப காலத்தில் வெளியிடப்படும் எச்சரிக்கைகள் குறித்து கவனம்!
வெப்ப அலைக்கு மத்தியில், வெளிப்புற நடவடிக்கைகளுக்கு பொருத்தமான ஆலோசனைகளை, பொதுமக்களுக்கு அவ்வப்போது வழங்குமாறு, அமைச்சரவை சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம் தென்மேற்கு பருவமழை காலம் குறித்த அண்மைய தகவல்களுக்கு, மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் எச்சரிக்கைகளைப் பார்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
------
2019 தொடங்கி 2024ஆம் ஆண்டு வரை, நாட்டில் ஏறக்குறைய 31 லட்சத்து 40 ஆயிரம் சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன!
அது சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரத்து எழுநூற்று 20 விபத்துகள் என, புக்கிட் ஆமான் போக்குவரத்து அமுலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
அவற்றுள் பெரும்பாலான விபத்துகள், சாலையில் கைப்பேசியைப் பயன்படுத்தியது, கவனக்குறைவு மற்றும் வாகனங்கள் சுயமாகக் கட்டுப்பாட்டை இழந்தது ஆகிய காரணங்களால் ஏற்பட்டவை என அத்துறை குறிப்பிட்டது.
------
ஜொகூர் பத்து பஹாட் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று இரு லாரிகளுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் உட்பட 16 பேர் காயமடைந்தனர், 27 பேர் காயமின்றி தப்பினர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather