← Back to list
KUSKOP 8446 இந்தியர்களுக்கு பலனளித்துள்ளது!
Jul 02, 2025

தொழில்முனைவோருக்கான அரசாங்க உதவித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, இந்தியர்களிடையே உயர்ந்து வருவதைக் காண முடிகிறது!
ஆனால் அது இன்னும் அதிகமானோருக்குத் தெரிய வேண்டும் என்கிறார், தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்.
தமதமைச்சு, சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து உரிய விளம்பரங்களை செய்து வருகின்ற போதிலும், அத்திட்டங்கள் மூலம் நன்மையடைந்தோரும் தகவல்களைப் பரப்புவதில் பங்கு வகிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.
அவ்வமைச்சின் பல்வேறு திட்டங்கள் வழி இவ்வாண்டு மட்டும் நன்மையடைந்த நாட்டின் இந்திய தொழிமுனைவோரின் எண்ணிக்கையே அது.
கடந்த ஆண்டு அவ்வெண்ணிக்கை வெறும் ஆறாயிரமாக இருந்ததை ரமணன் சுட்டிக் காட்டினார்.
ஆகக் கடைசியாக கடந்த வாரம் Kuskopபின் வணிகம் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக இரண்டு லட்சம் ரிங்கிட் ஒதுக்கிட்டை இந்திய தொழிமுனைவோர் பெற்றுக் கொண்டனர்.
------
நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்!
தாய்மொழிப்பள்ளிகள் ஒரு போதும் கைவிடப்படமாட்டாது என, என கல்வி துணை அமைச்சர் Wong Kah Woh உறுதியளித்துள்ளார்!
-------
நிலையான வருமானம் இல்லாத Gig தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா, வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாத வாக்கில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்!
நாட்டின் Gig பொருளாதாரத்தைப் பாதுகாக்க உலகிலேயே முதல் முறையாக அந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தும் நாடாக மலேசியா அமையும் என, துணை பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சில நாடுகளில் Gig தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்கள் இருக்கின்றன.
ஆனால் அவை நடப்புச் சட்டங்களில் தான் சேர்க்கப்பட்டிருக்கின்றனவே தவிற, மலேசியா போல், அதற்கென சிறப்புச் சட்டம் எந்த நாட்டிலும் இல்லை என்றார் அவர்.
அத்துறையில் இருக்கும் 12 லட்சம் தொழிலாளர்களுக்காக, சமூக பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதே இச்சட்ட மசோதாவின் சிறப்பு அம்சமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-----
மூன்று நாட்கள் பணி நிமித்தமாக இத்தாலி புறப்பட்ட பிரதமர் DSAI, அதன் தலைநகரமான ரோம் சென்று சேர்ந்துள்ளார்!
நாளை அவர் இத்தாலிய பிரதமரை அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேச அட்டவடையிடப்பட்டுள்ளது.
------
கெடா, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில், இன்று காலை ஒன்பது மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என MetMalaysia கணித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather