← Back to list
Syed Saddiq விடுவிக்கப்பட்டார் !
Jun 25, 2025

ஊழல் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகளிலிருந்து, Syed(side) Saddiq Syed Abdul Rahman விடுவிக்கப்பட்டுள்ளார்!
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து, அந்த ஜொகூர் முவார் நாடாளுமன்ற உறுப்பினர் செய்திருந்த மேல் முறையோட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
Parti Bersatu இளைஞர் பிரிவுக்குச் சொந்தமான பணத்தை கையாடல் செய்தது, பணச்சலவை மற்றும் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டது ஆகியவை தொடர்பில், அவர் மீது முன்னதாக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
அக்குற்றங்களுக்காக அவருக்கு ஒரு கோடி ரிங்கிட் அபராதம், ஏழாண்டுகள் சிறை மற்றும் இரு பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருந்தன.
-----
மலேசியர்களிடையே செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI பயன்பாட்டின் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
இன்னும், மூன்றில் இருந்து ஐந்து ஆண்டுகளில், AI தங்கள் வேலைகளை மேம்படுத்தும் என நம்புவதாக, பாதிக்கும் மேற்பட்டோர் IPSOS நடத்திய கணக்கெடுப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில், அவ்வெண்ணிக்கை, வெறும் 39 விழுக்காடாக இருந்தது.
அதே சமயம் 63 விழுக்காட்டினர், AI தங்களின் தற்போதைய வேலையை ஆக்கிரமித்துக்கொள்ளும் எனவும் அச்சம் தெரிவித்துளனர்.
----
ஒரே நாளில், ஐம்பது உயர் அபாயம் உள்ள லாரி மற்றும் பேருந்து நிறுவனங்களை சோதனையிட்டுள்ளது சாலை போக்குவரத்து துறை.
சம்மன்களைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அடையாளம் காண்ப்பட்ட, 500 வணிக வாகன நிறுவனங்களில் அவை அடங்கும்.
கனரக வாகனங்களை உட்படுத்திய விபத்துகளைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் 500 நிறுவனங்களையும் சோதனையிட்டு முடிக்க இலக்கு வைத்துள்ளதாகத் அத்துறை மேலும் சொன்னது..
----
திரங்கானுவில், இவ்வாண்டின், முதல் ஐந்து மாதங்களிலே, கிழக்குக் கரை ரயில் திட்ட பகுதிகளில் 22 மின்கம்பி திருட்டு சம்பவங்கள் பதிவகியுள்ளன.
இம்மாதிரியான திருட்டு சம்பவங்கள் ECRL திட்டம், சரியான நேரத்தில் முடிக்கப்படுவதற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.
-----
சிலாங்கூர், Hulu Langatடிலும், நெகிரி செம்பிலான், மலாக்காவிலும் ஜொகூரில் Tangkak, Segamat, Muar ஆகிய பகுதிகளிலும் இன்று மதியம் இரண்டு மணி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather