Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஈரானின் 3 அணு ஆயுதத் தளங்களைத் தாக்கிவிட்டோம்- Trump!

Jun 22, 2025


ஈரானின் 3 அணு ஆயுதத் தளங்களைத் தாக்கிவிட்டோம்- trump!

ஈரான் மீது அமெரிக்க நடத்தியிருக்கும் தாக்குதல் நிலைமையை மோசமாக்கும் அபாயம் கொண்டது! 

இதனால் மற்ற நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படலாம் என, ஐக்கிய நாடுகள் அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல்- ஈரான் இடையில் நிலவி வரும் இந்த பதட்டமான சூழலில், பிரச்னைகளைத் தவிர்ப்பதில் தான் கவனம் இருக்க வேண்டுமே தவிர, பதில் தாக்குதலில் அல்ல என, அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கூறியிருக்கிறார். 

எந்த பிரச்னைக்கும் போர் ஒரு தீர்வாக இருக்க முடியாது; பேச்சு வார்த்தையும் அமைதியும் தான் சிறந்த தீர்வு என அவர் வலியுறுத்தியிருக்கிறார். 

ஈரானின் மூன்று அணு ஆயுதத் தளங்களைத் தாக்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் Donald Trump இன்று காலை அறிவித்தார். 

இஸ்ரேல் -ஈரான் மோதலில் ,அமெரிக்க முதல் முறையாக நேரடியாகத் தலையிட்டு தாக்குதல் நடத்திருப்பது இதுவே முதல் முறை. 

----- 

ஊழியர் சேமநிதி கணக்கிலிருந்து, சுகாதார காப்புறுதிக்காக தங்களின் சேமிப்பை மீட்டுக் கொள்ளும் பரிந்துரையை மலேசியர்கள் வரவேற்கின்றனர்! 

Astro Radio சமூக ஊடகங்களில் நடத்திய வாக்கெடுப்பில், அது சரியான முடிவே என 59 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். 

சுகாதார காப்புறுதிக்காக சந்தாதாரர்கள் இரண்டாவது EPF கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளும் பரிந்துரையை சுகாதார அமைச்சு ஆராய்கிறது. 

-----  

முன்னாள் தேசிய காவல் படை தலைவர் Tan Sri Acryl Saniின் உருவத்தை வைத்து வெளியாக்கப்பட்ட காணொலி தொடர்பில், காவல் துறை விசாரிக்கிறது! 

அது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தயாரிப்பிலான காணொலி என்றும், அதனை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் அத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியது. 

-----  

இரண்டாவது பினாங்கு பாலத்தில், மோட்டார்சைக்கிள் பாதையில் மூதாட்டி ஒருவர் கார் ஓட்டிச் சென்ற சம்பவம் தொடர்பில் காவல் துறை விசாரணையைத் தொடக்கியுள்ளது!  

அதன் தொடர்பிலான காட்சிகள் அடங்கிய காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

-----  

ஜொகூர், Batu Pahatடில் கடந்த 11 ஆண்டுகளாக தனது சொந்த மகள்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக நம்பப்படும் தந்தை, விசாரணைக்காக, ஏழு நாட்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us