← Back to list
சுகாதார காப்பீட்டுத் திட்டம் கட்டாயமல்ல !
Jun 20, 2025

EPF சந்தாதாரர்கள், தங்களின் இரண்டாம் கணக்கிலுள்ள நிதியை, சுகாதார காப்புறுதியைச் செலுத்த பயன்படுத்துவது, முழுமையாகத் தனிப்பட்ட விருப்பமாகவே இருக்கும்.
அந்த திட்டம், அதிகச் சொந்த செலவினமின்றி, உயர்தரமான தனியார் சுகாதார சேவைகளை விரைவாகப் பெற உதவும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது, நாட்டின் மொத்த சுகாதாரச் செலவுகளில் 32 விழுக்காடு வரை, மருத்துவக் காப்புறுதி இல்லாத நோயாளிகளால் நேரடியாக, அவர்களது சொந்தச் செலவிலே முடிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டாம் கணக்கிலுள்ள தொகையில் இருந்து, வெறும் 1 விழுக்காடு மட்டுமே, சுகாதாரக் காப்புறுதிக்காக பயன்படுத்தப்படும்.
---------
ஈரானில் இருந்து மலேசியர்களை வெளியேற்றும் முயற்சிகளை Wisma Putra இறுதிச் செய்து வருகிறது !
அங்கிருந்து வெளியேற ஒப்புக்கொண்டுள்ள மலேசியர்கள், வெள்ளிக்கிழமை Tehran-இல் இருந்து புறப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல்- ஈரான் இடையிலான பதட்டம் வலுத்து வருவதையடுத்து, அந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
--------
அனைத்து அரசுத் துறைகளும், அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில், இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அது, உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உள்ளூர் விவசாயிகளை ஆதரிக்கவும் உதவும் என அவர் கூறினார்.
---------
பஹாங், பெர்லிஸ், லபுவான், சபா, சரவாக்கில், பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யுமென, Met Malaysia கணித்துள்ளது.
-------
பேராக் ஈப்போவில், அடுக்குமாடி கட்டிடத்தின் 7-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த, 20 வயது பெண் ஒருவர், பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather