← Back to list
SRC International ஊழல்; நஜிப் விடுதலை!
Jun 20, 2025

SRC International நிறுவன ஊழல் தொடர்பிலான மூன்று பணச்சலவை குற்றச்சாட்டுகளிலிருந்து,டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் விடுவிக்கப்பட்டுள்ளார்!
2019ஆம் ஆண்டில் பதிவுச் செய்யப்பட்ட அவ்வழக்கில், நஜீப் குற்றவாளி என்பதை அரச தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கத் தவறியதை அடுத்து, அவரை விடுதலை இன்றி விடுவிக்க உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
SRC International ஊழலை உட்படுத்திய வேறொரு குற்றத்திற்காக நஜீப் ஏற்கனவே சிறை வாசம் அனுபவித்து வருகிறார்.
அவ்வழக்கில் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் நிதியை அவர் கையாடல் செய்தது கண்டறியப்பட்டது.
------
பொருள் சேவை வரி GST இப்போதைக்கு மீண்டும் கொண்டு வரப்படாது!
இன்னும் அதிகமான மலேசியர்களின் வருவாய் குறைவாக இருப்பதைச் சுட்டிக் காட்டி, பிரதமர் மீண்டும் அந்த உத்தரவாதத்தை வழங்கினார்.
அதன் மூலம் உண்டாகும் சுமையைக் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரால் சுமக்க முடியாது என அவர் கூறினார்.
GSTயை மீண்டும் கொண்டு வரும் பரிந்துரை, மலேசியர்களின் சராசரி மாதாந்திர சம்பளம் நான்காயிரம் ரிங்கிட்டை எட்டிய பிறகே பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
-----
இதனிடையே 2015 ஆம் ஆண்டு ஈராயிரம் ரிங்கிட்டாக இருந்த மலேசியர்களின் சராசரி மாதச் சம்பளம், 2022 டில் மூவாயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது!
புள்ளிவிவரத் துறை வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், அது 3.7 விழுக்காட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது.
பொருளாதார அடிப்படையில் 2022ஆம் ஆண்டில், உயர் திறன் கொண்ட தொழிலாளர்கள் சராசரியாக ஆறாயிரம் ரிங்கிட்டுக்கும் அதிமான மாத சம்பளத்தைப் பெற்றனர்.
குறைந்த திறனுடையவர்கள் ஏறக்குறைய ஆயிரத்து என்னூர முதல் ு ஈராயிரத்து ஐநூரு ரிங்கிட் வரை பெறுவதாகவும் அத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-----
ஆசியான் நாடுகள் தூய்மையான எரிசக்தி மற்றும் வானிலை இலக்குகளை அடையும் பாதையில் தீவிரம் காட்டி வருகின்றன!
அந்நாடுகள் மின்சாரத் துறையில் அதீத முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காண முடிகிறது என, எரிசக்தி மாற்ற மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு கூறியுள்ளது.
மலேசியா ஏற்கனவே இந்த ஆண்டிற்கான இலக்கை அடைந்துவிட்டதாகவும் , அவ்வமைச்சு FMT-யிடம் தெரிவித்துள்ளது.
-----
சரவாக், கூச்சிங்கில், காரில் சென்று கொண்டிருக்கும் போது, ஜன்னல் வழியாக மாதிரி துப்பாக்கியை காட்டியதாக கூறப்படும் ஓட்டுநரை காவல் துறை கைது செய்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
-----
கடந்த வாரம் இந்தியா அமெதாபாத்தில் விபத்துக்குள்ளான, Air India விமானத்தின், இயந்திரங்களில் ஒன்று புதியது!
மற்றொன்று டிசம்பர் வரை பராமரிப்புத் தேவை படாத, நல்ல நிலையில் உள்ள engine என்பது தெரிய வந்துள்ளது.
குறைந்தது 270 பேர் உயிரிழந்த அவ்விபத்து, இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்படதா என்ற கோணத்தில் ஆரய்யப்பட்ட போது, புலனாய்வாளர்கள் அந்த தகவலை வெளியிட்டனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather