← Back to list
விரிவாக்கப்பட்ட SST மறுபரிசீலிக்கப்படலாம் !
Jun 19, 2025

 
இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு, விரிவாக்கப்பட்ட SST-யை விதிப்பது குறித்து, அரசாங்கம் மறுபரிசீலனை செய்யலாம் ! 
ஆப்பிள், mandarin ஆரஞ்சு பழம் போன்ற, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படாத பழங்களும், அப்பொருட்களில் அடங்கும் என, துணைப் பிரதமர் Datuk Seri Dr Zahid Hamidi தெரிவித்துள்ளார். 
இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மீதான SST, குறைந்த வருமானம் பெருபவர்களை பாதிக்கும் என கவலைகள் எழுந்துள்ளன. 
ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் விரிவாக்கப்பட்ட SST, அத்தியாவசியமற்ற மற்றும் விருப்ப அடிப்படையிலான பொருட்களுக்கு 5-இல் இருந்து 10 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும். 
--------- 
இதனிடையே, மலேசியாவின், அமெரிக்காவுடனான வரி விதிப்பு குறித்த பேச்சுவார்த்தை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது !  
தற்போது Washington-னில் அதன் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வரும், முதலீடு, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் அவ்வாறு கூறியதாக, பிரதமர் தெரிவித்துள்ளார் .  
முன்னதாக, மலேசிய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா 24 விழுக்காட்டு வரியை அறிவித்திருந்தது.  
அந்த வரியை குறைக்க, அமெரிக்காவும், மலேசியாவும், ஜூலை 8-ஆம் தேதிக்குள் உடன்பாட்டை எட்டவில்லையென்றால், அந்த வரி அமலுக்கு வரும்.  
-------- 
அண்மையில் KL-லில் நிகழ்ந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், திட்டமிடப்பட்ட குற்றக்குழுக்களுடன் தொடர்பிருக்கலாம் ! 
Brickfields மற்றும் Cheras-சில் நிகழ்ந்த அச்சம்பவங்கள் குறித்த, ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், காவல்துறை அவ்வாறு கூறியது.  
-------- 
குழந்தைகள் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான ஐயாயிரம் காணொலிகள் மற்றும் படங்களை வைத்திருந்த, 20 வயது பல்கலைக்கழக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
--------- 
கடந்த வாரம் பேராக் கெரிக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, சட்ட ஆலோசனை தேவைப்பட்டால், அதனை வழங்க UPSI தயாராக உள்ளது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather