← Back to list
AI-க்கென ஒரு சட்டம்!
Jun 18, 2025

AI சட்டங்கள் குறித்த தனது முன்மொழிவை , தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம், இம்மாத இறுதிக்குள் இலக்கவியல் அமைச்சிடம் சமர்ப்பிக்கும்.
அது, விரிவான நிர்வாக கட்டமைப்பை உருவாக்க, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் அத்துறையின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
முன்னதாக, இலக்கவியல் யுகத்தில் நிலவும் சட்ட சிக்கல்களை தீர்க்கும் பொருட்டு, AI சட்டத்தை உருவாக்க மலேசியா ஆய்வு செய்து வருவதாக, சட்ட சீர்திருத்த அமைச்சர் கூறியிருந்தார்.
நடப்பில் மலேசியாவில் AI-ஐ மையமாகக் கொண்ட குறிப்பிட்ட சட்டங்கள் எதுவும் இல்லை.
காரணம் AI என்பது பாரம்பரிய தொழில்நுட்பங்களைப் போல் அல்லாமல், முற்றிலும் மாறுபட்ட விதத்தில் செயல்படுகிறது என்றார் அவர்.
------
ஊடகங்களில் மாற்று திறனாளிகளுக்கான பிரத்யேக தகவல்களும் பகிரப்படுவது மிக அவசியம் என்கிறார் தொடர்பு துறை அமைச்சர், Dato Fahmi Fadzil
முன்னதாக அவரது அலுவலகத்தில், மலேசிய காது கேளாதோர் கூட்டமைப்பு மற்றும் தேசிய சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் சங்கத்தடன் விவாதிக்கப்பட்ட விஷயங்களில், அதுவும் ஒன்று என அவர் சொன்னார்.
ஊடகங்கள் அவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதிலும் தயாரிப்பதிலும், முழு ஆதரவு வழங்கும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
-----
தனது அதிகாரிகளின் உடல் கேமரா பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது!
அதற்காக, கூடுதலாக பத்தாயிரம் கேமராக்களை வாங்குவதற்கான கோரிக்கையை அத்துறை முன்வைத்துள்ளது.
நடப்பில், 7,700 க்கும் குறைவான உடல் கேமராக்களே காவல் அதிகாரிகளிடையே பயன்பாட்டில் உள்ளன.
-----
இந்தோனேசியா, Bali க்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் குறைந்தது 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன!
மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் விமான சேவைகளை அது உட்படுத்தியிருக்கிறது.
Lewotobi Laki-Laki எரிமலை வெடித்ததில், Bali யின் சில பகுதிகளில் உயர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
----
TikTok செயலியைத் தடைச் செய்யும் முடிவை, குறைந்தது இன்னும் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கிறது அமெரிக்கா!
அம்முடிவை அமெரிக்கா ஒத்தி வைப்பது, அதிபர் Donald Trump இவ்வாண்டு வெள்ளை மாளிகையில் பொறுப்பேற்றதிலிருந்து, இது மூன்றாவது முறையாகும்..
ஜனவரியில் நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவில், சீனாவைச் சேர்ந்த அச்செயலியின் உரிமையாளர், அதனை அமெரிக்காவிடம் விற்க மறுத்ததை அடுத்து, TikTokகை முடக்க அமெரிக்கா முடிவெடுத்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather