← Back to list
மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் !
Jun 17, 2025

ஈரான்–இஸ்ரேல் இடையிலான போர் நிலவரம் குறித்து அரசாங்கம் கவனமாகக் கண்காணித்து வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் !
அந்நடுகளில் இருந்து மலேசியர்களை வெளியேற்றும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என அவர் கூறினார்.
இதுவரை மலேசியர்கள் யாரும் அவ்விரு நாடுகளுக்கிடையிலான தாக்குதலில் பாதிக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா கூறியதையும், அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த வார இறுதியில், இஸ்ரேல், ஈரானிய இராணுவம் மற்றும் அணுசக்தி தளங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தத் தொடங்கியதில், அந்த இரு நாடுகளிலும் பலர் உயிரிழந்தனர்.
--------
பேராக் கெரிக் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில், புதிய நிலையம் ஒன்றை கட்டுவது குறித்து, தீயணைப்பு, மீட்புத் துறை பரிசீலித்து வருகிறது !
அது, அந்த பாதையில், ஏதெனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அங்கு உடனே தமது வீரர்கள் செல்ல உதவும் என அத்துறை கூறியது.
அங்கு அவசர நிலை ஏற்படும் போது, Bomba உறுப்பினர்கள், கெரிக்கிலிருந்து பாலிங்கிலிருந்து செல்ல வேண்டியதாயிற்று; அதனால் சம்பவ இடத்தை அடைய அதிக நேரம் எடுப்பதாக அது சொன்னது.
கடந்த வாரம் 15 மாணவர்களை பலிகொண்ட பேருந்து விபத்தை அடுத்து, அது அவ்வாறு சொன்னது.
-------
தலைநகர், Cheras-சில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய பேரங்காடி, வழக்கம் போல் செயல்படுகிறது.
இருவரது உயிரைப் பறித்த அந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை, காவல்துறை தேடி வருகிறது.
---------
காலஞ்சென்ற மஇகா முன்னாள் தேசிய தலைவர், டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேலுக்கு இறுதி மரியாதை செலுத்த, பொதுமக்கள் நாளை காலை 9 மணி தொடங்கி, KL Bangsar-ரில் உள்ள அவரது இல்லத்துக்குச் செல்லலாம்.
பிற்பகல் ஒரு மணி வாக்கில், இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------
அடுத்த வாரம் செவ்வாய்கிழமை, 2024-ஆம் ஆண்டின் STPM தேர்வு முடிவுகள் வெளிவருகின்றன.
மாணவர்கள் காலை 11 மணி தொடங்கி, தங்கள் முடிவுகளை, மலேசிய தேர்வு மன்றத்தின் அகப்பக்கத்தின் வாயிலாக சரிபார்த்துக்கொள்ளலாம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather