← Back to list
KL,Brickfields-ல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!
Jun 14, 2025
KL, Brickfields ல் உள்ள உணவகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததை காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இருவர் காயமடைந்த வேளை, ஒருவருக்கு படுகாயம்.
அச்சம்பவம், குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-----
சிலாங்கூரில், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உள்ளூர் பாடகர் மற்றும் நடிகர் ஒருவர் மீது செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என அம்மாநில காவல் துறை சொன்னது.
-----
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை!
நிலைமைய அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும், ஈரானில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு உறுதிச் செய்யப்படும் என வெளியுறவு அமைச்சு கூறியது.
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது இஸ்ரேல் நேற்று சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது.
இருநூறுக்கு மேற்பட்ட போர் விமானங்கள் பங்கேற்ற இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம், Tel Aviv உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து, 250க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலில் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
-----
குஜராத், அமெதாமத்தில், விபத்துக்குள்ளான AIR இந்தியா விமானம் தொடர்பான விசாரணி நடந்து வருகிறது.
விமானத்தின் எஞ்சின்கள், இறக்கைகள் மற்றும் தரையிறங்கும் Gear ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
அவ்விமான நிறுவனத்தில் ஏற்படக்கூடிய பராமரிப்பு சிக்கல்களையும் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பறவைகள் மோதிய சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்தப்படவில்லை.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather