← Back to list
ஒரு முறை பயன்படுத்தும் வேப்புக்கு தடை வேண்டும் !
Jun 07, 2025

மலேசியா ஒருமுறை பயன்படுத்தும் வேப் பொருட்களுக்கு முழுமையான தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் !
சிறிய அளவு, பிரகாசமான பொட்டலம், வகைசெருகப்பட்ட இனிப்பு, பழச்சுவைகள் ஆகியவையால், குழந்தைகள் மிகுந்தளவில் ஈர்க்கப்பட்டுள்ளதாக பினாங்கு நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.
அவை தூக்கு எறியப்படும்போது, நச்சு இரசாயனங்கள் கசிந்துவிடும் என்பதால், சுற்றுச்சூழல் ஆபத்தையும் ஏற்படுத்துவதாகவும், அச்சங்கம் FMT-யிடம் சொன்னது.
அண்மையில், இங்கிலாந்து, ஒருமுறை பயன்படுத்தும் வேப் பொருட்களுக்கு நாடு தழுவிய அளவில் தடை விதித்ததை அடுத்து, அச்சங்கம், அவ்வாறான பரிந்துரையை முன்வைத்தது.
--------
தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து சேகரிக்கும் தொலைபேசி தரவுகளிலிருந்து, எந்தவொரு தனிப்பட்ட தகவலும் வெளியிடப்படாது !
மலேசிய தொடர்புப் பல்லூடக ஆனையம் அவ்வாறு கூறியது.
அத்தரவுகள் அந்தந்த தனிமனிதர்களை அடையாளம் காட்ட முடியாத வகையில் மாற்றப்பட்டிருக்கும் என்றும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா துறையின் கொள்கை வடிவமைப்பிற்காக மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் அவ்வாணையம் தெளிவுப்படுத்தியது.
தரவு சேகரிப்பு பிரச்சினை தொடர்பான ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, MCMC அவ்வாறான விளக்கத்தைக் கொடுத்தது.
----------
Pahang Jerantut-டில், இரண்டு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர் !
அவர்கள் அனைவரும், 17-இல் இருந்து, 26 வயதுடையவர்களாவர் என தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
---------
சிலாங்கூர் Port கிள்ளானில், படகு கவிழ்ந்து காணாமல் போயிருக்கும் இருவரைத் தேடும் பணிகளை, அதிகாரிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர் !
அச்சம்பவத்தில், மூன்று வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துவிட்டது உறுதியானதாக, கடல்சார் அமலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
-----------
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுலதான் இப்ராஹிம், இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் !
தியாக உணர்வு, மக்களை ஒருங்கிணைத்து, அன்பு, ஒற்றுமை மற்றும் மனித சமூகத்தின் சிறப்புமிக்க பண்புகளை வளர்க்கும் நம்பிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather