← Back to list
தாம் அமைச்சராவது பிரதமர் கையில்!
Jun 04, 2025

தம்மை முழு அமைச்சராக நியமிக்கும் முடிவை பிரதமரிடமே விட்டுவிடும் படி, தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர், டத்தோஸ்ரீ ராமணன் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்!
பிரதமரின் அதிகாரத்திற்கு மட்டுமே உட்பட்ட அந்த முடிவை எடுப்பதில், அவருக்கு அழுத்தம் தர வேண்டாம் என, ரமணன் கூறினார்.
PKR கட்சித் தேர்தலில் தோல்வி கண்டதால் பதவியை விட்டு விலகுவதாக இரு அமைச்சர்கள் அறிவித்திருப்பதை அடுத்து, அவ்விடங்களில் ஒன்று ரமணனுக்குக் கொடுக்கப்படலாம் என்ற கருத்துக்கள் வலுத்து வருகின்றன.
தமது பதவி காலம் தொடங்கியதிலிருந்தே இதுவரை அவர், தொழில்முனைவோர் மற்றும் இந்திய சமுதாய மேம்பாட்டிற்காக அமுலுக்குக் கொண்டு வந்த உதவித் திட்டங்கள், ஏராளமானோரை நன்மையடையச் செய்துள்ளன.
இதை கருத்தில் கொண்டும், இந்தியர் ஒருவருக்கு நடப்பு அமைச்சரவையில் இன்னும் முழு அமைச்சர் பதவி கொடுக்கப்படாததையும் சுட்டிக்காட்டி, வல்லுனர்கள் அப்பரிந்துரையை முன்வைத்துள்ளனர்.
------
வேப் அல்லது மின்னியல் சிகரெட்டுகளுக்கு நாளைய தலைமுறை அடிமையாகும் பிரச்சனையைக் களையும் முயற்சிகள், பள்ளி பருவத்திலிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும்.
புகைப்பிடிக்கும் பழக்கம் மீதான தாக்கம் குறித்த கல்வியைப் பள்ளி பாடதிட்டங்களில் உட்படுத்துவதும் அதிலடங்கும் என, பொது சுகாதார மருத்துவ நிபுணர் Dr Muhamad Hazizi Muhamad Hasani வலியுறுத்துகிறார்.
இதனிடையே, இளையோர் மத்தியில் வேப் பயன்பாட்டைத் தவிர்க்க, அதனை விற்கும் நடவடிக்கைகளை முடக்கும் சில மாநிலங்களின் முயற்சிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
-----
நாட்டில் சமூக ஊடகத் தளங்கள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்த, சட்ட விவகாரங்களுக்கான அமைச்சுடன் இணைந்து பணியாற்ற தொடர்புத்துறை அமைச்சு தயார்!
நடப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய சட்டவிவகாகரங்களுக்கான அமைச்சு முன்வைத்த பரிந்துரையைத் தொடர்ந்து, அவ்வமமைச்சு அவ்வாறு தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதையும், இலக்கவியல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டங்களில் பங்கேற்பதையும் கட்டாயமாக்குவது அதில் அடங்கும்.
-----
கடந்த வாரம், நெடுஞ்சாலை கட்டமைப்பிற்கான உரிமம் பெற்ற ஒருவரிடமிருந்து, மொத்தம் 143 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதை, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
கி்ள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை அமைக்க அரசாங்கம் வழங்கிய sukuk நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்கும், அந்த சொத்துகளுக்கும தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது.
பறிமுதல் செய்யப்படடவற்றில் வங்கிக் கணக்குகள், சொகுசு வீடு, கார்கள், கைக்கடிகாரங்கள், கைப்பைகள், குதிரைகள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் ஆகியவை அடங்கும்.
-----
ஜோகூர், தங்காவில் தனது மனைவியைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர், இன்று முதல் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் கொலை செய்த பின்னர் தனது மாமியார் வீட்டிற்குச் சென்று தீவைத்ததாகவும் கூறப்படுகிறது.
-----
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 24 கோடியிலிருந்து 50 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அந்நாட்டில் வரும் 5 ஆண்டுகளில் புதிதாக 50 விமான நிலையங்களைத் திறக்க, அதன் விமானப் போக்குவரத்து துறை அமைச்சு இலக்கு வைத்துள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதை மேற்கோள்காட்டி அதன் அமைச்சர் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather