← Back to list
கிள்ளான் பள்ளத்தாக்கில் ரயில் சேவைகளுக்கு 50% கழிவு!
Jun 03, 2025

கிள்ளான் பள்ளத்தாக்கில் அனைத்து வகை KTM Komuter ரயில் சேவைகளின் டிக்கட்டுகளுக்கும் ஐம்பது விழுக்காடு கழிவு வழங்கப்படுகிறது!
இன்றும் நாளையும் பயணிகள் அச்சலுகையை அனுபவிக்கலாம் KTMB அறிவித்துள்ளது.
KTM Komuter வழித்தடங்களில் சமிக்ஞைகளைத் தரமுயர்த்தும் பணிகளால் ஏற்படும் பயண தாமதத்தை ஈடு செய்யவே அச்சலுகை வழங்கப்படுகிறது.
----
மின்னியல் சிகரட் அல்லது வேப்பின் திரவம் சார்ந்த எந்த இறக்குமதி, உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளும், 2024 பொது சுகாதாரத்திற்கான புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தான் வரும்!
அதே சமயம் உற்பத்தி உரிமத்திற்கான வெளியீடு, முதலீடு, வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சின் கீழ் கட்டுப்படுத்தப்படுமே தவிர தனக்குக் கீழ் அல்ல என, சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.
புகைப்பிடித்தல் பொருட்கள் கட்டுப்பாடு, அரச மலேசிய சுங்கத்துறை உள்ளிட்ட மேலும் சில அமைப்புகளின் அதிகாரத்திற்கும் உட்பட்டதே.
எனவே, புகையிலை அல்லது வேப் சார்ந்த உற்பத்தி, இறக்குமதி, விநியோகம் சார்ந்த எந்த முடிவுகளும், அரசாங்க அமைப்பின் கூட்டு முடிவே என்பதை KKM தெளிவுப்படுத்தியது.
-----
சிலாங்கூர், புத்ரா ஹயிட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக உதவியை நீட்டிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்!
வாடகை வீடுகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என தற்காலிகமாக வழங்கப்பட்ட உதவிகளின் காலக்கெடு முடிவடையும் நிலையில் உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் சிக்கலை எதிர் நோக்குகின்றனர்.
முன்னதாக அந்த தீ விபத்தில் எண்பத்தொரு வீடுகள் சேதமடைந்தன.
------
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், கூட்டரசு பிரதேசங்களில் அதிகாரப்பூர்வ அரச பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அப்பயணத்தின் போது, அவர் தனிப்பட்ட முறையில் ஏழைகளுக்கான நிதி மற்றும் உதவித் தொகைகளை வழங்குவுள்ளார்.
----
ஜொகூர், தங்காக்வில் ஓய்வு பெற்ற 58 வயதுடைய மாது ஒருவர், மோசடி கும்பலிடம் ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் இழந்துள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather