← Back to list
கனரக வாகனங்களுக்கு ஊக்கத்தொகையா?
May 30, 2025

சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கில், கனரக வாகனங்களினால் எற்படும் நெரிசலையும், விபத்துக்களையும் குறைக்க, இரு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன !
உச்ச நேரங்களுக்கு அப்பாற்பட்ட நேரங்களில், துறைமுகத்திற்குள் நுழையும் கனரக வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இருவழிப் போக்குவரத்துக்கு 15 ரிங்கிட் ஊக்கத்தொகையும் ; ஒருவழிப் போக்குவரத்துக்கு 7 ரிங்கிட் 50 சென் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
அந்நடவடிக்கை ஆகஸ்டில் தொடங்கி, அடுத்தாண்டு தொடக்கத்தில் முழுமையாக அமலாக்கத்துக்கு வரும் என அமைச்சு சொன்னது.
-----
மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் Denmark-ற்கு செல்ல தயாராக இருக்கின்றனர்.
ஊழலை எதிர்த்து போராட அவர்களுக்கு பயிற்சி தேவைப்படுவதே, அதற்குக் காரணம் என MACC தெரிவித்துள்ளது.
புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில், அதன் ஆணையர் Denmark தூதரை சந்தித்துப் பேசிய போது, அது முடிவானது.
-----
பினாங்கில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், Track and Trace செயலியில் பதிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர் !
போலி டுரியான்கள் விற்கப்படுவதை தடுக்க அது உதவும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 50 முதல் 60 விவசாயிகள், அம்முறையை பயன்படுத்தத் தயாராக இருக்கின்றனர்.
-----
விரைவில் கடுமையான வெப்ப நிலை ஏற்படும் எனக் கூறி சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவலை, மலேசிய வானிலை ஆய்வுத் துறை மறுத்துள்ளது.
தற்போது நிலவி வரும் வெப்ப நிலை, தென்மேற்கு பருவமழை காலத்தில் ஒவ்வோராண்டும் வழக்கமாக ஏற்படும் ஒன்று என அத்துறை சொன்னது.
இந்த நிலை செப்டம்பர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-------
குவாலா சிலாங்கூரில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 17 வயது இளைஞன் விபத்துக்குள்ளாகி, பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather