← Back to list
உணவு தொண்டையில் சிக்கி, குழந்தை மரணம் !
May 29, 2025

கோலாலம்பூரில், குழந்தை பராமரிப்பு மையத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அம்மையத்தை நடத்துபவர், குழந்தை பராமரிப்பாளர் உட்பட சிலர், காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் !
தற்போது அதன் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதுவரை, அம்மையத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த 7 மாத ஆண் குழந்தை, தொண்டையில் உணவு சிக்கி உயிரிழந்தது, பிரேத பரிசோதனையின் முடிவில் தெரிய வந்துள்ளது.
அக்குழந்தை, கடந்த திங்கட்கிழமை உயிரிழந்ததை அடுத்து, அதன் தந்தை காவல்துறையிடம் புகாரளித்தார்.
--------
மலேசியாவின் ஓய்வுப் பெறும் வயதை, 65-ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு, மற்றொர் இளைஞர் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது !
அது, புதிய பட்டதாரிகள் மற்றும் இளைய தொழிலாளர்கள், அதிகரித்து வரும் சவாலான வேலை சந்தையில் போட்டியிடுவதை கடினமாக்கும் என, 4B மலேசிய இளைஞர் இயக்கம் கூறியது.
--------
தாதியர்களுக்கு, வாரத்திற்கு 45 மணி நேர வேலை திட்டத்தை செயல்படுத்த, சுகாதார அமைச்சுக்கு மேலும் இரண்டு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது !
ஆகஸ்டு ஒன்றாம் தேதிக்குள், அத்திட்டம் அனைத்து மருத்துவமனைகளிலும் அமலாக்கத்துக்கு வந்து விட வேண்டுமென, பொதுச் சேவை துறை தெரிவித்துள்ளது.
புதிய பணி அட்டவணையை ஏற்கனவே திட்டமிட்டு தயார் செய்துள்ள சுகாதார மையங்கள், நீட்டிப்பு காலம் முடியும் வரை காத்திருக்காமல், அதை உடனடியாக செயல்படுத்தலாம் என அத்துறை சொன்னது.
--------
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதைத் தடை செய்யும் திட்டம் குறித்து MARA ஒரு விரிவான ஆய்வை நடத்தி வருகிறது.
அத்தடை உறுதியானால், அதன் நிதியுதவி பெற்ற மாணவர்களுக்கு சாத்தியமான மாற்று வழிகளை ஆராய்வதும் அதிலடங்கும் அது கூறியது.
அந்தத் தடை, 2025-2026 கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்ததாக, முன்னதாக செய்திகள் வெளிவந்தன.
------------
கெடா, பேராக், ஜொகூர், சபா, சரவாக்கில், பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather