← Back to list
முதுகலை பட்டப்படிப்பிற்கு உயர்ந்த சம்பளமா?
May 29, 2025

மலேசியாவில், முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டால் உயர்ந்த சம்பளம் கிடைக்கும் எனக் கூறப்படுவது சரிதான்!
ஆனால் அது சில இடங்களில் மாறுபடுவது மறுக்க முடியாதது என்கிறார், மலேசிய சிறு நடுத்தர வணிகங்களின் சங்கத் தலைவர்.
முதுகலைப் பட்டதாரிகளின் தகுதிக்கு ஏற்றவாறு மிகவும் குறைவான வேலைகள், அல்லது பொறுப்புகளே இருக்கின்றன.
பட்டதாரிகள் அதிகம் இருப்பதால், ஆள்பலம் அதிகமாகி, அதனை எதிர்கொள்ள சிலர் தங்கள் தகுதியை விட குறைவான வேலையை ஏற்றுக் கொள்ளும் சம்பவங்கள் நிகழ்வதை அவர் சுட்டிக் காட்டினார்.
வேலை வாய்ப்பு் குறைவு, தொழில்நுட்பத் திறன்களின் பற்றாக்குறை் ஆகியவையும் இந்நிலைக்குக் காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
-----
அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து தாம் இன்னும் பரிசீலிக்கவில்லை என பிரதமர் DSAI தெரிவித்துள்ளார்!
பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli மற்றும் , இயற்கை வள சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Nik Nazmi Nik Ahmad பதவியில் இருந்து விலகுவதாக கூறினாலும், அவர்கள் விடுமுறையில் இருக்கும் இந்நேரத்தில் பதவி மாற்றம் செய்ய முடியாது என அவர் கூறினார்.
முன்னதாக, அவர்கள் இருவரும் பதவி விலகுவதாக அறிவித்திருந்தனர்; நடைபெற்ற 2025 PKR கட்சித் தேர்தலில், அவர்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அம்முடிவிற்கு வந்தனர்.
-----
ஐம்பது நாட்கள் ஆகியும் Datin sri Pamela Ling இன்னும் கண்டுப்பிடிக்கப்படாதது குறித்து அவரின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது அவர் காணாமல் போனதாக நம்பப்படுகிறது.
-----
இதனிடையே, சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான அரசியல் உறவுகளில் விரிசல் காணப்படுவதால், சீனாவிலிருந்து வரும் மாணவர்களின் விசாக்களை ரத்து செய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
முன்னதாக, அனைத்துலக மாணவர்களுக்கான அனைத்து விசா நேர்காணல்களையும் நிறுத்தி வைக்குமாறு உலகெங்கிலும் உள்ள தனது தூதரகங்களுக்கு அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather