← Back to list
மனிதர் - யானை மோதல்; விரைவில் தீர்வு !
May 22, 2025

Gerik-Jeli நெடுஞ்சாலையில், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களைத் தடுப்பதற்கான தீர்வுகள் விரைவில் கிடைக்கலாம் !
அது குறித்து, பேராக் அரசாங்கம், மாநில வனவிலங்குத் துறையுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளது.
அதன் தீர்வுகளின் ஒரு பகுதியாக, யானைகளின் நடத்தை குறித்த ஆழமான ஆய்வு நடத்தப்படும் என மாநில Menteri Besar தெரிவித்தார்.
அண்மையில் அங்கு யானைகள், வாகனங்களுடன் மோதும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
எனவே தாம் அதனை கடுமையாக எடுத்துக்கொள்வதாகவும், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண, மேலும் ஆழமான விசாரணை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
----------
இதனிடையே, நாடு முழுவதும் நேற்று மட்டும், கிட்டத்தட்ட 1,800 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன
அதில் 14 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
--------
Lima கண்காட்சியின் போது, வீடுகள் சேதமடைந்திருப்பதாக, காவல்துறைக்கு 27 புகார்கள் கிடைத்துள்ளன !
அதன் வான்வழி காட்சிகளின்போது ஏற்பட்ட அதிர்ச்சி அலைகளால், வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக, அந்த புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
--------
நிலப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தை மீறியதற்காக, 135 வாகனங்களை சாலைப் போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்துள்ளது !
செல்லுபடியாகும் சாலை வரி, காப்பீடு அல்லது கட்டாய ஆய்வுகள் இல்லாமல், வேண்டுமென்றே வாகனங்களைச் செலுத்தும் லாரி உரிமையாளர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
----------
கெடா, பினாங்கு உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என Met Malaysia தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather