Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தாதீர் !

May 21, 2025


கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தாதீர் !

 

யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் தாக்குதல்களைத் தடுக்க, இரவில் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் ! 

மோட்டார்சைக்கிளோட்டிகள் உள்ளிட்ட சிறிய வாகனமோட்டிகளை, வனவிலங்குத் துறை அவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

இரவு நேரத்திலும் அப்பகுதியில் யானைக் கூட்டங்கள் உணவைத் தேடி போகும். 

யானைகளைக் கண்டால் horn-னை அழுத்துவது, highbeam விளக்கை திறப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் எனக் கூறிய அத்துறை, அது இன்னும் அவற்றை பதட்டமடையச் செய்துவிடும், என்றது.

நேற்றிரவு, பேராவில் யானகள் காரை சேதப்படுத்திய சம்பவத்துக்கு, நபர் ஒருவர் அடித்த horn சத்தமே காரணம் என்பது உறுதியானதை அடுத்து, அத்துறை அவ்வாறு கூறியது.  

------- 

பினாங்கு அரசாங்கம், வேப் விற்பனையை முழுமையாகத் தடை செய்வது குறித்து பரிசீலிக்கத் தயாராக உள்ளது ! 

எனினும், பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம், மின் சிகரெட்டுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த உதவுகிறதா என்பதை பார்த்தப் பின்னரே, அதன் தடை குறித்து முடிவெடுக்கப்படும் என மாநில ஆட்சிக்குழு உறிப்பினர் தெரிவித்துள்ளார்.

---------- 

ஜொகூர் பாருவில் ஏற்பட்டிருக்கும் நீர் விநியோகத் தடையால், கிட்டத்தட்ட 1 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன ! 

அத்தடைக்குக் காரணமான நீர் குழாய் பழுதுபார்ப்புப் பணிகள் நாளை காலை 7 மணிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

---------- 

ஜொகூர் UTM பல்கலைக்கழக பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், யாரும் காயமடையவில்லை என அப்பல்கலைக்கழகம் ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.

----------- 

உலகளவில் 25 விழுக்காட்டு வேலைகள், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படலாம். 

அனைத்துலக ஆய்வறிக்கையில் அது தெரிய வந்துள்ளது. 

AI-யின் அசுர வளர்ச்சியால் குமாஸ்தா அல்லது அலுவலர் தொழிலே அதிகம் பாதிக்கப்படுமென்றும், அதற்கு அடுத்து டிஜிட்டல் சார்ந்த தொழில்களும் ஊடகம், நிதி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்படுவர் என அவ்வறிக்கைக் கூறியது.  


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us