← Back to list
அவசர தொடர்பு எண் தேவை !
Apr 23, 2025

எதிர்ப்பாரா அசம்பாவிதங்கள் ஏற்படும் போது கைகொடுக்க, அனைவரும் அவசர தொடர்பு எண் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்!
அவசர தேவைகளுக்கு காவல் துறை, தீயணைப்பு மீட்புத் துறை மாதிரியான உதவிகளை நாடுவதற்கு முன்னர், பதட்டப்படாமல் தேவையான தகவல்களை முதலில் எடுத்து வைத்துக் கொள்தல் அவசியம் என்கிறார் தீயணைப்பு மீட்புத் துறையைச் சேர்ந்த Mohd Nazrullah Abdul Aziz.
சிலாங்கூர், Putra Heights-சில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட எரிவாயு தீச்சம்பவத்தை மேற்கோள் காட்டி பேசிய போது, அவர் அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
----
இதனிடையே, அத்தீச்சம்பவத்தில் தத்தம் வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கு, நாளை மூன்று மாத வாடகை வீட்டு வசதி ஏற்பாடு செய்துத் தரப்படும் என சிலாங்கூர் அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
----
இரண்டாம் கட்ட தேசிய சேவை பயிற்சித் திட்டம் 3.0 விற்கு விண்ணப்பித்தவர்கள், அதன் முடிவுகளை இப்போதே சரிபார்த்துக் கொள்ளலாம்.
மே 11 முதல் ஜூன் 24ஆம் தேதி வரை நடத்தப்படவிருக்கும் புதிய PLKN பயிற்சி திட்டத்தில் ஐநூற்று ஐம்பது பேர் தேர்வு செய்யப்படுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
----
நேற்று நடந்து முடிந்த பேராக் Ayer Kuning இடை தேர்தலின் முன்கூட்டிய வாக்களிப்பில், வாக்கு எண்ணிக்கை 93 விழுக்காட்டை எட்டியிருப்பதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்தது..
----
இந்தியா காஷ்மீரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு, அமெரிக்க அதிபர் Donal Trump, Russia அதிபர் Vladimir Putin உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் சுற்றுப் பயணிகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலியாகியிருக்கின்றனர்.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அத்தாகுதலுக்குக் காரணமானவர்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather