← Back to list
PdPR முறை அமல்படுத்தப்படலாம் !
Apr 21, 2025

வரவிருக்கும் ASEAN உச்சநிலை மாநாடுகளின் போது, வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் முறையை செயல்படுத்துவதில், கல்வி அமைச்சுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை !
பெரிய அளவிலான கூட்டங்களின் போது, ஏதேனும் சாலைகள் மூடப்படுவதாக இருந்தால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அது உதவும் என அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார்.
மே மற்றும் அக்டோபர் மாதங்களில், ஆசியான் உச்சநிலை மாநாடுகளின் போது, வீட்டிலிருந்து வேலை செய்தல் மற்றும் PDPR ஏற்பாடுகளை செயல்படுத்துவதற்கான, வெளியுறவு அமைச்சரின் திட்டம் குறித்து பேசிய போது, Fadhlina அவ்வாறு கூறினார்.
சீன அதிபர் Xi Jinping-கின் வருகையின் போது, சில சாலைகள் மூடப்பட்டதால், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில், கடுமையான போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டது குறித்து எழுந்த, பொதுமக்களின் புகார்களை அடுத்து, அந்த திட்டம் தொடங்கப்பட்டது.
--------
இதனிடையே, தாய்லாந்து, வியட்நாமிய போன்ற ஆசியான் மொழிகளைப், பள்ளிகளில் விருப்பப் பாடங்களாக, கல்வியமைச்சு அறிமுகப்படுத்தவிருக்கிறது.
அது, அண்டை நாடுகளுடனான நட்புறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என, அவ்வமைச்சு சொன்னது.
--------
அண்மைய PKR கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்ற வதந்திகளை பிரதமர் மறுத்துள்ளார்.
கட்சி அரசியலை விட, தனிப்பட்ட செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, தனது அமைச்சர்களை மதிப்பிடுவதாக, Datuk Seri Anwar Ibrahim கூறினார்.
கட்சித் தேர்தல்களில் பல முக்கிய உறுப்பினர்கள், தங்கள் பதவிகளை இழந்ததை அடுத்து, அவர் அவ்வாறு சொன்னார்.
--------
அடையாள சரிபார்ப்பு செயல்முறைகளை, டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, போக்குவரத்து சம்மனங்களை செலுத்த, மக்கள் MyDigital ID முறையைப் பயன்படுத்த உள்துறை அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
----------
கெடாவில் உள்ள UUM பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்துக்கான காரணத்தை விசாரிக்க, இரண்டு சிறப்பு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அச்சம்பவம் குறித்து, முழுமையான விட்சாரணைக்கு உதவ, அப்பல்கலைக்கழகம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பையும், வழங்கி வருகிறது.
---------
இதனிடையே, நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,600-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவுச் செய்யப்பட்டன; அதில் 16 மரணங்கள் பதிவாகின.
----------
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப்பாண்டவர் Francis, இன்று தனது 88-ஆவது வயதில் காலமானார்.
அர்ஜென்டினாவில் பிறந்த அவர், 2013-ஆம் ஆண்டு போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜேசுட் இயேசு சபையைச் சேர்ந்த முதல் போப்பாண்டவர், அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப் ஆண்டவர், 1200 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக தேர்வான ஐரோப்பியரல்லாத போப் ஆண்டவர் என, பல பெருமைகளைப் பெற்றவராவார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather