Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தேசிய கொடி, ஒரு நாட்டின் சின்னம் !

Apr 18, 2025


தேசிய கொடி, ஒரு நாட்டின் சின்னம் !

 

உள்ளூர் நாளிதழ் ஒன்றின் முதல் பக்கத்தில் முழுமையற்ற தேசிய கொடி படம் வெளியிடப்பட்டது, சாதாரணம் விஷயம் அல்ல என பிரதமர் தெரிவித்துள்ளார் ! 

தேசிய கொடி என்பது ஒரு நாட்டிற்கு முக்கிய சின்னமாகும் என Datuk Seri Anwar Ibrahim கூறினார். 

தேசியக் கொடியை படமாகவோ அல்லது விளக்கப்படமாகவோ பயன்படுத்தும்போது, அனைத்து தரப்பினரும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

அச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

நேற்று, சம்பந்தப்பட்ட பத்திரிகையின் தலைமை மற்றும் துணை தலைமை ஆசிரியரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 

----------

சிலாங்கூர் Putra Heights-சில் வெடித்த நிலத்தடி எரிவாயு குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

அது, தற்போது தடயவியல் குழுக்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக அத்துறை கூறியது. 

அச்சம்பவம் தொடர்பான  முதற்கட்ட அறிக்கை, இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  

அந்த தீ விபத்தில் 81 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்த வேளை பலர் காயமடைந்தனர். 

-------- 

Negeri Sembilan Seremban-னில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், இன்னொருவர், இன்று முதல் இரண்டு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படுகிறார். 

அச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஏதுவாக, இதுவரை சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

அந்த கடத்தல் சம்பவத்துக்கு தொடர்பான சந்தேக நபர் ஒருவர், கடந்த திங்கட்கிழமை கிள்ளானில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  

-------- 

இலக்கவியல் கற்றல் மற்றும் வகுப்பறை ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில், 2027-ஆம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், smartboard-களை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. 

அது, 2027-இல் அறிமுகமாகவிருக்கும் புதிய பாடத்திட்டத்துக்கு உதவும் என அவ்வமைச்சு கூறியது. 

----------- 

தேசிய மற்றும் மாநில பூங்காக்கள், வனப்பகுதிகள், கடல் பூங்காக்கள் மற்றும் புவியியல் பாரம்பரிய தளங்கள் போன்ற முக்கிய இயற்கை இடங்களிலும், அரசாங்கம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளை தடை செய்யும் !  

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, அத்தடை ஒரு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைகிறது என இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us