Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

புதிய வகை மோசடி !

Apr 18, 2025


புதிய வகை மோசடி !

இணையத்தில் Search Engine எனப்படும் தேடுதல் இயந்திரத்தைப் பயன்படுத்தி, குறுக்கு வழியில் போலி வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களை விளம்பரடுத்த தொடங்கியிருக்கின்றனர் மோசடிக்காரர்கள்! 

அவர்களிடம் கவனமாக இருக்கும்படி அரச மலேசிய காவல் படை பொதுமக்களை அறிவுறுத்துகிறது. 

அம்மாதிரியான போலி விளம்பரங்களின் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு தென்படுவதாகவும், அதில் ஏமாந்து சிக்கிக் கொள்பவர்களின் இழப்பு மிகவும் அதிகம் என்றும், PDRMமின் வர்த்தகக் குற்ற புலனாய் பிரிவு தெரிவித்துள்ளது. 

அவ்வகையான விளம்பரங்களைக் கண்டறிந்து அகற்ற Google நிறுவனத்திடம் தக்க தர செயல்பாட்டு நடைமுறைகள் இருந்தாலும், சில சமயங்களில் நிலைமை கட்டுப்பாட்டிற்கு வெளியே இருப்பதை அது NSTயிடம் சுட்டிக்காட்டியது. 

சமீபத்தில் Google தளத்தில் வந்த விளம்பரம் ஒன்றின் இணைப்பை சுடுக்கிய பெண் ஒருவர், போலி கடன் திட்டத்தில் 20 ஆயிரம் ரிங்கிட்டுக்கு மேல் இழந்துள்ளதை காவல் துறை மேற்கோள்காட்டியது. 

---- 

இதனிடையே, இணையத்தில் பாதுகாப்பாக பொருட்கள் வாங்குவது  தொடர்பில் விழிப்புணர்வை அதிகரிக்க, உள்நாட்டு வாணிக வாழ்க்கைச் செலவீன அமைச்சு TikTokகுடன் கைகோர்த்துள்ளது! 

இணையத்தில் பொருட்களை வாங்கும் போது, மோசடிக்கு ஆளாகாமல் இருப்பது பற்றி பயனர்களுக்குக் கற்றுக் கொடுப்பதே அக்கூட்டணியின் முதன்மை நோக்ககம். 

---- 

மியன்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்க, மலேசியா ஆயுதப் படையைச் சேர்ந்த மருத்துவ குழு ஒன்றை அரசாங்கம் அந்நாட்டிற்கு அனுப்பியிருக்கிறது! 

69 பேரைக் கொண்ட குழு இன்று காலை அப்பணிக்காக மியன்மார் புறப்பட்டுள்ளது. 

முன்னதாக நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்கு மருத்துவமனை ஒன்றைக் கட்டும் மலேசியாவின் திட்டம், சரியான சூழல் இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இப்போதைக்கு தேவையான உதவிகளை இந்த மருத்துவ குழு அவர்களுக்கு வழங்கும் என அரசாங்கம் கூறியது. 

----- 

கடந்த சில நாட்களாக, சிலாங்கூர், கிள்ளானில் உள்ள Tengku Ampuan Rahimah மருத்துவமனையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, நோயாளிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததே காரணம் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

கூடுதல் படுக்கைகளைத் தயார் செய்வது உட்பட, நிலைமையைக் கையாள உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அது தெரிவித்தது.. 

அம்மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், நெரிசல் ஏற்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியதை அடுத்து அது அந்த விளக்கத்தை அளித்தது. 

----- 

சீனா தனது அரிய தொழில்நுட்பங்களில் ஒன்றான, கனிமங்களை எடுக்கும் செயல்முறை யுக்திகளை,மலேசியாவோடு பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறது! 

அதன் வழி, நாட்டின் வருவாயை அதிகரிக்க முடியும் என்பதோடு,  கனிம வளங்கள் மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், அவற்றின் பொருளாதார மேம்பாட்டிற்கும் இது வழிவகுக்கும் என, வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். 

------ 

மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம்  மற்றும் பொருளாதார அமைச்சு இணைந்து, மாநில மற்றும் மாவட்ட அளவில், அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களைக் கண்காணிக்க, சிறப்புக் குழு ஒன்றை அமைக்கவுள்ளன. 

விதிமீறல்கள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற குற்றங்களை தடுக்கும் நோக்கில் அது உருவாக்கப்படுகிறது. 

---- 

அமெரிக்காவின் சமீபத்திய வரி விதிப்பு தொடர்பான கருத்து பரிமாற்றத்திற்காக, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தலைமையில், மலேசிய பிரதிநிதிகள் சிலர் அடுத்த வாரம் அமெரிக்கா புறப்படுகின்றனர். 

----- 

கல்வி முறையை சீர்திருத்தும் நோக்கில், 2027 ஆம் ஆண்டிற்கான பள்ளி பாடத்திட்டத்தின் கீழ்,  இலக்கவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடங்களை கல்வி அமைச்சு சேர்க்கவிருக்கிறது. 

---- 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us