← Back to list
சீன அதிபர் Xi Jin Ping வருகை !
Apr 16, 2025

சீன அதிபர் xi jin ping கின் வருகையை ஒட்டி, தலைநகர் மற்றும் Putrajaya சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படுகின்றன
இன்று மாலை மணி 6.30-ற்கு Persiaran Seri Perdana , Lebuh Perdana Barat , Lebuh Sentosa, Jalan Tunku Abdul Rahman , Lebuh Gemilang, Jalan P5 ஆகிய சாலைகள் மூடப்படும்.
நாளை காலை மணி 8.30-க்கு Jalan P5 , Lebuh Gemilang , Persiaran Selatan , Lebuhraya Putrajaya Dengkil , Lingkaran Putrajaya , ELITE, Lebuh KLIA மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சாலைகள் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை மூடப்படுகின்றன.
சாலை பயனர்கள் தங்களின் போக்குவரத்துகளை திட்டமிட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அண்மைய போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்துகொள்ள, Astro Radio Traffic சமூக ஊடகங்களை வலம் வரலாம்.
-----
சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக வீடுகள், தொலை தூரப் பகுதிகளில் இருப்பதாக, கூறப்படுவதை சிலாங்கூர் மாநில அரசு மறுத்துள்ளது.
காலியான வீடுகள் இருக்கும் இடங்களைப் பொருத்தே அச்சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அது கூறியது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற இடங்களைத் தேர்வுசெய்ய, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையும் அது சுட்டிகாட்டியது.
இவ்வேளையில், Selangor Prihatin நிதி திரட்டல் மூலம் , பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை 4.7 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
-----
சிலாங்கூர், செப்பாங்கில் KLIA எக்ஸ்பிரஸ் மற்றும் KLIA டிரான்சிட் எக்ஸ்பிரஸ் ரயில் மின்கம்பிகளை திருடும் சம்பவத்திற்கு பிண்ணனியில் உள்ள இன்னும் இரண்டு நபர்களை காவல் துறை தேடி வருகிறது..
----
ஜொகூரில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான Deepfake-ஐ பயன்படுத்தி போலி ஆபாச படங்களை உருவாக்கி விற்றதாக, குற்றம் சாட்டப்பட்ட, தனியார் பள்ளி மாணவனின் தடுப்பு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவன் மீதான விசாரணை இன்னும் முழுமை பெறவில்லை.
அது தொடர்பாக 19 வயது ஆடவனையும் காவல் துறை, தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
-----
நேற்று வரை நாடு முழுவதும் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.
அவற்றில் பதினெட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன.
-----
கிளாந்தான், திரங்காணு, பஹாங், ஜொகூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று இரவு ஒன்பது மணி வரை இடியுடன் கூடிய்ஹ கனமழை பெய்யும் என MetMalaysia கணித்துள்ளது.
----
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather