← Back to list
நாட்டின் ஐந்தாவது பிரதமர் மறைவு !
Apr 15, 2025

நாட்டின் ஐந்தாவது பிரதமர் Tun Abdullah Ahmad Badawiக்கு இறுதி மரியாதை செலுத்த முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak தேசிய பள்ளிவாசலின் தொழுகை மண்டபத்துற்கு வந்துள்ளார்!
அவருடன் முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Muhd குடும்பத்தார் உட்பட, மேலும் பல அரசியல் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்த அங்கு வந்துள்ளனர்.
முன்னதாக மாமன்னர், பிரதமர் DSAI, தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் Datuk Seri Ramanan Ramakrishnan, ஒற்றுமை துறை துணை அமைச்சர் Saraswathy Kandasamy உள்ளிட்டோர் தங்கள் சமூக ஊடகங்களில் அனுதாபம் தெரிவித்திருந்தனர்.
காலை பத்து மணி தொடங்கி பொதுமக்களும் Tun Abdullahவுக்கு இறுதி மரியாதை செலுத்த திரளாக வரத் தொடங்கியிருக்கின்றனர்.
இறுதி மரியாதை செலுத்தும் சடங்கி நன்பகல் 1 மணி வரை நடைபெறும்.
அதற்குப் பிறகு, Tun Abdullahவிக்கு முழு அரச மரியாதையுடன் தேசிய நல்லடக்கச் சடங்கு நடைபெறும்.
நல்லடக்கச் சடங்கு முடியும் வரை தேசிய பள்ளிவாசலை சுற்றி இரண்டு கிலோமீட்டர் தூரத்துற்கு எல்லா கட்டிடங்களிலும், மெர்டெகா சதுக்கத்திலும், Jalur Gemilang தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
இதனிடையே, பேராக் மாநில கொடியும் இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அம்மாநில சுல்தான் தெரிவித்துள்ளார்.
Tun Abdullahவின் இறுதி மரியாதைச் சடங்குகளின் நேரடி ஒளிபரப்பை Astro AWANI அலைவரிசை 501றில் காணலாம்.
2003 அக்டோபர் தொடங்கி, 2009 ஏப்ரல் வரை Tun Abdullah நாட்டின் ஐந்தாவது பிரதமராக சேவையாற்றினார்.
என்னோடு வேலை செய்யுங்கள், எனக்காக வேலை செய்யாதீர்கள் என்ற தாரக மந்திரத்தோடு அவர் பதவிக்கு வந்தவராவார்.
பொதுச் சேவை துறை மறுசீரமைப்பு, ஊழல் தடுப்பு முயற்சிகள், ஆகியவற்றில் திறம்பட பணியாற்றியவர்.
ஊழல் ஒழிப்பு அமைப்பை, தனது பதவி காலத்தின் போது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையமாக மாற்றிய பெருமையும் இவரைச் சேறும்.
------
கெடா, பினாங்கு, பேராக், கிளாந்தான், திரங்காணு, பஹாங் மற்றும் சிலாங்கூரில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
அம்மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று நன்பகல் ஒரு மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என MetMalaysia கணித்துள்ளது.
-----
ஆகக் கடைசி தகவல்படி சபாவிலும் ஜொகூரிலும் ஐநூருக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather