← Back to list
ஆயர் கூனிங்கில் மும்முனை போட்டி !
Apr 12, 2025

பேராக் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில், Barisan Nasional, Perikatan Nasional, Parti Sosialis Malaysia-வுக்கிடையே, மும்முனை போட்டி நிலவுகிறது.
Barisan Nasional-லைப் பிரதிநிதித்து, Dr Mohamad Yusri Bakir போட்டியிடுகிறார்.
Perikatan Nasional-லை பிரதிநிதித்து, Abdul Muhaimin Malek போட்டியிடுகிறார்.
Parti Sosialis Malaysia-வை பிரதிநிதித்து, பவானி KS போட்டியிடுகிறார்.
இதனிடையே, அங்கு ஏப்ரல் 26-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகின்ற வேளை, ஏப்ரல் 22-ஆம் தேதி முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறுகிறது.
----------
நோன்புப் பெருநாள் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட Op Selamat, சாலை சோதனை நடவடிக்கையின் போது, நாடு முழுவதும் கிட்டத்தட்ட பத்தாயிரம் சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், அவ்வெண்ணிக்கை 4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக, தேசிய காவல்படை துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆயினும், உயிரிழப்புகளை உட்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மோட்டார் சைக்கிளோட்டிகளே, சாலை விபத்தில் அதிகம் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
--------
சிலாங்கூரில் வெள்ளத்தால் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியிருக்கின்றனர்.
ஆக அதிகமாக, ஷா அலாமில், 600-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள வேளை, கிள்ளானில் 300-க்கும் மேற்பட்டோரும், சுபாங் ஜயாவில் 68 பேரும், PPS-சில் இருக்கின்றனர்.
அதே வேளை, ஜொகூர் Batu Pahat-டில் 203 பேர் PPS-சில் தங்கியிருக்கின்றனர்.
---------
இதனிடையே, ஷா அலாமில் வெள்ளம் காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும், மற்றொர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
24 வயதான அவ்வாடவர், தனது கைப்பேசியை சார்ஜ் செய்யும் போது, அச்சம்பவத்துக்கு ஆளானதாக, முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று, அம்மாவட்டத்தில், அதே காரணத்தால் உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பப்படும், வெளிநாட்டு ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
--------
சிலாங்கூர் Putra Heights எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான முழு அறிக்கை, அடுத்த மாத மத்தியில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதாக, மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் மோசமான வானிலையின் காரணமாக, மண்ணாய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வு பூர்த்தியானால் மட்டுமே உண்மை நிலவரத்தை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க இயலும் எனவும் அவர் கூறினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather