← Back to list
கனமழையால் வெள்ளம் !
Apr 11, 2025

நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் சில பகுதிகளில் வெள்ளம் ஏறியிருக்கிறது!
Shah Alam, Petaling, Klang ஆகிய வட்டாரங்கள் அதில் பாதிக்கப்பட்டிருப்பதாக Astro Awani தகவல் கூறுகிறது.
தீயணைப்பு மீட்புப் படை ஏறக்குறைய நூற்று 40 பேரைக் காப்பற்றியிருக்கிறது.
இதனிடையே ஜொகூரில் இன்று காலை வெள்ளத்தால் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இருநூற்று பத்தாகக் குறைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ளம் மற்றும் போக்குவரத்து நிலவரங்களை அறிந்துக் கொள்ள Astro Radio Traffic சமூக ஊடகங்களை வலம் வரலாம்.
------
இதனிடையே வெள்ளத்தால் கிள்ளான் பள்ளத்தாக்கில் ரயில் பயணங்கள் தடைப்பட்டுள்ளன!
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கென சிறப்பு நின்று நின்று செல்லும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என, KTMB தெரிவித்திருக்கின்றது.
------
சிலாங்கூர், Putra Heights எரிவாயு குழாய் தீவிபத்தின் போது உதவிய ஐந்து பாக்கிஸ்தானியர்களுக்கு அந்நாடு மரியாதை அளித்து கெளரவித்திருக்கிறது.
அவர்களுக்கு மலேசியாவுக்கான பாக்கிஸ்தானிய உயர் ஆணையம் கெளரவச் சான்றிதழை வழங்கியது.
------
Rahmah மலிவு விலை விற்பனை திட்டத்தை உயர்கல்விக் கழகங்களுக்கும் விரிவுப்படுத்தும்படி, உள்நாட்டு வாணிக வாழ்க்கைச் செலவீன அமைச்சு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது!
இது இளைஞர்களின் நிதிச்சுமையைக் குறைக்க உதவும் என, உள்நாட்டு வாணிக செயற்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
------
சபாவில் Borneo pygmy யானைகளைக் கொல்லும் பொறுப்பற்ற தரப்பினர் குறித்து தகவல் தருபவர்களுக்கு, பத்தாயிரம் ரிங்கிட் சன்மானத்தை அம்மாநில சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது!
கடந்த ஜனவரியிலிரிந்து அவ்வகை யானைகள் வேட்டையாடப்படும் சம்பவங்கள் சில பதிவாகியிருப்பதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் அமைச்சர் கூறினார்.
-------
குவால திரங்காணுவில், இணையத்தில் நோன்பு பெருநாள் சிறப்பு பரிசுக் கூடைகளை வாங்கும் மோசடியில் சிக்கிய மாது ஒருவர், இருபத்து ஆராயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் பறிகொடுத்துள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather