Now Playing

Anirudh/Hardee Bee (Beatboxer from Malaysia)/Sivakarthikeyan/Keerthi Suresh

Remo Nee Kadhalan

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

Album Art Now playing

Remo Nee Kadhalan

Anirudh/Hardee Bee (Beatboxer from Malaysia)/Sivakarthikeyan/Keerthi Suresh

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

யாரும் பலியாகவில்லை !

Apr 10, 2025


யாரும் பலியாகவில்லை !

 

சிலாங்கூர் Putra Heights எரிவாயு குழாய் தீ விபத்தில் உயிரிழப்புகள் தொடர்பான புகார் ஏதும், சுகாதார அமைச்சு பெறவில்லை. 

மக்கள் அவ்விபத்தில் பலியாகியதாக சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவல்களுக்கு எதிராக, அவ்வமைச்சு காவல்துறையிடம் புகாரளித்துள்ளது. 

அது குறித்து, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சு கூறியது. 

இன்று வரையிலான நிலவரப்படி, பாதிக்கப்பட்ட 38 பேர் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சைப் பெற்று வருவதாக அது சொன்னது. 

அதிலொருவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் வேளை, அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. 

--------- 

இதனிடையே, அவ்விபத்தால் பாதிகப்பட்டவர்களுக்கு, தற்காலிக வீடுகளை வழங்கும் சில வீட்டு உரிமையாளர்கள் மீது, உள்துறை அமைச்சர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  

பாதிக்கப்பட்டவர்களின் துன்ப கால மத்தியிலும், அவர்களிடமிருந்து வாடகை முன்பணத்தை கோருவதாக புகார்கள் எழுந்துள்ளதாக, Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். 

அதே வேளை, அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 190 வீடுகளில் வசிப்பவர்கள், தத்தம் வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக, காவல்துறை கூறியது. 

அவை அனைத்தும் பாதுகாப்பானவை என உறுதிப்படுத்தப்பட்டப் பின்னரே, அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். 

--------- 

பினாங்கில் பினாங்கில் MARA அறிவியல் இளநிலை கல்லூரி தங்கும் விடுதியில் நடந்த பகடிவதை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை நிறைவுப் பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

அவ்வறிக்கை, அரசு தரப்பு துணை தலைமை வழக்கறிஞரிடம் கொண்டு செல்லபடும் அத்துறை சொன்னது. 

-------- 

ரயில் நிலையங்களின் முகப்புகளில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு, கூடுதலாக 5 ரிங்கிட் கட்டணம் விதிக்கும், KTMB-யை,  Fomca கடுமையாகச் சாடியுள்ளது ! 

KTMB செயலியை பதிவிறக்கம் செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகளும், மூத்த குடிமக்களும் அக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவது கவலையளிப்பதாக Fomca கூறியது. 

--------- 

நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,900-ஆயிரத்தும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 10 மரணங்கள் பதிவாகின. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us