← Back to list
அமெரிக்க வரிக்கு மலேசியா அச்சம் !
Apr 09, 2025

அமெரிக்கா அறிவித்துள்ள வரிவிதிப்பு குறித்து அதனுடன் கலந்து பேச அரசாங்க அதிகாரிகள் சிலர் Washington-னுக்கு அனுப்பப்படவுள்ளனர்!
மலேசிய பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதால், இதுவரை இருநாடுகளுக்குமே சம பங்கு நன்மைகளைக் கொடுத்து வந்தது.
ஆனால் அமெரிக்காவின் இந்த புதிய வரியானது நிலைமையை மோசமடையச் செய்யக்கூடும் என பிரதமர் அச்சம் தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான பொருளாதார கூட்டை மலேசியா நிலைநிருத்தும் என்றும், இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் விதமான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
எந்த நாடுகள் பேச்சு வார்த்தைக்கு வந்து தனது பக்கம் உள்ள நியாயத்தைக் கூறினாலும், வரிவிதிப்பை இடைநிறுத்தம் செய்யும் தமக்கு இல்லை என, அமெரிக்க அதிபர் Donald Trump ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
--------
பினாங்கில் பகடிவதை சம்பவம் நிகழ்ந்த MARA இளநிலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து 15 வயது மாணவர்களிடமிருந்து காவல் துறை வாக்குமூலம் பதிவுச் செய்திருக்கிறது!
பாதிக்கப்பட்ட மாணவர், காணொலி எடுத்தவர் உட்பட மொத்தம் ஏழு மாணவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக மாவட்டக் காவல் துறை கூறியது.
எஞ்சிய மாணவர்களிடமும் வாக்குமூலம் பதிவுச் செய்து, ஓரிரு நாட்களில் விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அச்சம்பவத்துடன் தொடர்பிருந்த மாணவர்களை MRSMமிலிருந்து நீக்க MARA முடிவுச் செய்திருந்தது.
-------
சிலாங்கூர், Putra Heights தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 55 மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து அமைச்சு இலவசமாக வழங்கியிருக்கிறது.
உள்ளூர் நிறுவனம் ஒன்று அதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
------
நாட்டின் உயர்கல்வி துறை வலுப்படுத்தும் நோக்கில், உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abd Kadir, துருக்கியே, செளதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
------
ஆகக் கடைசி தகவல்படி ஜொகூரில் முன்னூற்று 10 பேர் வெள்ளத்தால் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சபாவில் நூற்று 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-------
பேராவின், Manjung, Bagan Datuk, Hilir Perak ஆகிய பகுதிகளில் இன்று காலை ஒன்பது மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather