← Back to list
மண்ணை தோண்டும் பணிக்குப் பின் தீ !
Apr 04, 2025

சிலாங்கூர் Putra Heights-சில் எரிவாயு குழாய் தீ விபத்து நடந்த இடத்துக்கு அருகில், மண்ணைத் தோண்டும் நடவடிக்கை நடைபெற்றதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மண் வாரி இயந்திரங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அந்நடவடிக்கை, குழாய்களில் ஏதெனும் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என மாநில காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்துள்ளார்.
அந்நடவடிக்கைகள், மார்ச் 30-ஆம் தேதியே நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
அந்த வெடிப்பின் அளவு பெரியதளவில் இருப்பதால், அப்பகுதியை நிலைப்படுத்த இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது.
அதன் பின்னரே, அப்பகுதியில் மண்ணைத் தோண்டி அடுத்தக் கட்ட விசாரணையை தொடங்க முடியும், என்றாவர்.
அச்சம்பவம் தொடர்பில் 56 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதாக அவர் மேலும் கூறினார்.
----------
இவ்வேளையில், அத்தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்திருக்கிறது இலக்கவியல் அமைச்சு !
அவர்களுக்கு, 100 மடிக்கணினிகள், 100 கைத்தொலைபேசிகள் உட்பட மற்ற மின் சாதனங்களும் வழங்கப்படும் என அமைச்சர் Gobind Singh Deo தெரிவித்துள்ளார்.
Kota Kemuning சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குச் சென்று, அதற்கு விண்ணப்பிக்கலாம் என அவர் கூறினார்.
---------
அதே சமயம், அந்த தீ சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இன்று தற்காலிக பயன்பாட்டிற்காக 25 கார்களைப் பெற்றனர்.
இன்னும் 25 கார்கள் அடுத்த திங்கட்கிழமை ஒப்படைக்கப்படும் என மாநில MB தெரிவித்தார்.
---------
மற்றொரு நிலவரத்தில், அவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.
அது பொதுச் சேவையைப் பாதிக்காது என, பொதுச் சேவை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
----------
நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்து, மக்கள் நகரத்துக்குத் திரும்புவதால், முக்கிய விரைவுச் சாலைகளில் 2.42 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather