← Back to list
விஷச் சட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும் !
Mar 26, 2025

போதைப்பொருள் மோசடி நீதிமன்ற வழக்குகளுக்கான, வழக்குத் தொடரும் செயல்முறையை மேம்படுத்த, விஷச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
போதைப்பொருள் தொடர்பான இரசாயனங்களின் பட்டியலைப் புதுப்பிக்க வேண்டும் என காவல்படை துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
காரணம், மருந்து உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பல புதிய இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போதைய இரசாயனங்களின் பட்டியலில் 110 பொருட்கள் உள்ளன என்றும், ஐக்கிய நாடுகள் சபை, மோசடிக்கு ஆளாகக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகளை பட்டியலிட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
---------
KLIA அமைப்புகள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, கடந்த வார இறுதியில், எந்த விமானங்களும் பாதிக்கப்படவில்லை என மலேசியா Airports Holdings தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில், பயணிகள் யாரும் சிக்கித் தவிக்கவில்லை என்றும் அது FMT-யிடம் கூறியது.
மலேசியா Airports Holdings-சின் டிஜிட்டல் அமைப்புகளுகளை சட்டவிரோதமாக ஊடுருவிய கும்பல், அரசாங்கத்திடமிருந்து, 10 மில்லியன் டோலரை பிணைப்பணமாக கேட்டதாக, முன்னதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.
அதற்கு அரசாங்கம் இணங்கவில்லை.
---------
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, Op Selamat சாலை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஏழாயிரம் போக்குவரத்து அமலாக்க அதிகாரிகள் பணியமர்த்தப்படுகின்றனர்.
அக்காலகட்டத்தில் போக்குவரத்து சீராக இருப்பதை அவர்கள் உறுதிச் செய்வர் என காவல்படை துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
400-க்கும் மேற்பட்ட நெரிசல் ஏற்படும் இடங்களையும், 100-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களையும் அத்துறை கண்டறிந்துள்ளது.
Op Selamat சாலை சோதனை நடவடிக்கை, வரும் சனிக்கிழமை தொடங்கி, அடுத்த வார வியாழக்கிழமை வரை மேற்கொள்ளப்படும்.
--------
இதனிடையே, Raya முதல் நாளன்று அனைத்து மலேசியர்களும், கூடுதல் 5GB இணையச் சேவையை அனுபவிக்கலாம்.
prepaid அல்லது postpaid பயன்படுத்தும் அனைவருமே, அந்த சேவையைப் பெறலாம் என தொடர்புத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
--------
மற்றொரு பக்கம், அப்பெருநாளையொட்டி, ஜொகூர் அரசு ஊழியர்கள் ஆயிரம் ரிங்கிட் உதவிநிதியைப் பெறவுள்ளனர்.
கிளாந்தான் மற்றும் சபா பொதுச் சேவை ஊழியர்களுக்கும், தலா 500 ரிங்கிட் உதவிநிதி வழங்கப்படுகிறது.
----------
அதே சமயம், கெடா, கிளாந்தான் மற்றும் திரங்கானு, அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை 30-ஆம் தேதி, சிறப்பு விடுமுறையாக அறிவித்துள்ளன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather