← Back to list
மஸ்ஜிட் இந்தியா ஆலயத்துக்கு தீர்வு !
Mar 25, 2025

கோலாலம்பூர் Masjid India-விலுள்ள தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரத்திற்கு, சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது !
ஆலயம், 50 மீட்டர் தொலைவில், அருகிலுள்ள இடத்திற்கு மாற ஒப்புக்கொண்டுள்ளதாக கூட்டரசு பிரதேச அமைச்சர், டத்தோ ஸ்ரீ Dr Zaliha Mustapha அறிவித்துள்ளார்.
ஆலயம் இடமாற்றம் காணும் அந்த புதிய இடம், நான்காயிரம் சதுர அடி பரப்பளவில் இருக்கும் என Zaliha தெரிவித்தார்.
ஆலய இடமாற்ற பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடரும் வரை, அந்த கோயில் வழக்கம் போல செயல்படும், என்றாரவர்..
இடமாற்றம் தொடர்பில் நல்லிணக்க அடிப்படையில் கோயில் நிர்வாகம், நில உரிமையாளர் மற்றும் DBKL நடத்திய பேச்சுவார்த்தைகளின் பலனாக, இவ்விவகாரம் சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, ஆலயம் உடைபடாமல், மத நல்லிணக்கம் பாதிக்கப்படாமல், அவ்விவகாரம் சுமூகமான முறையில் தீர்வு காணப்படும் என பிரதமர் உறுதியளித்திருந்தார்.
----------
இந்திய சிறு தொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காக 5 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில், வணிகம் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
SME வங்கி வாயிலான அக்கடனுதவித் திட்டத்தின் கீழ், சிறு தொழில் வணிகர்கள் 1 லட்சம் ரிங்கிட்டில் இருந்து 3 லட்சம் ரிங்கிட் வரை
கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தொழில்முனைவோர் - கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சர் Datuk Seri R. Ramanan இன்று அதனைத் தெரிவித்தார்.
-----------
தனியார் வாகனங்களுக்கு நெரிசல் கட்டணத்தை விதிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு போக்குவரத்து அமைச்சுக்கு இல்லை !!
அது வெறும் ஆய்வு கட்டத்தில் மட்டுமே இருப்பதாக அமைச்சர் Anthony Loke தெரிவித்தார்.
சாலைகளில், குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் நெரிசலைக் குறைக்க, பல்வேறு தரப்பினர் அவ்வாறு பரிந்துரைத்திருப்பதை அடுத்து, அவர் அவ்வாறு கூறி தெளிவுப்படுத்தினார்.
------------
ஜொகூரில் வெள்ளத்தால் கிட்டத்தட்ட ஆயிரத்து 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள வேளை, சபாவில் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் PPS-சில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather