← Back to list
சமய இழிவு குற்றம் குறைவு !
Mar 25, 2025

அமலாக்க தரப்பினரின் கடும் நடவடிக்கையால் நாட்டில் இவ்வாண்டு சமயத்தை இழிவுப்படுத்தும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் முன்று மாதங்களில் அது தொடர்பிலான 17 புகார்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் பதிவானதைக் காட்டிலும் அவ்வெண்ணிக்கை 12 புகார்கள் குறைவு என அது கூறியது.
சமய விவகாரங்கள் தொடர்பில் இழிவாக கருத்துரைப்போர் மீது அரச மலேசிய காவல் படை PDRM, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் MCMC-யின் ஒத்துழைப்புடன் சட்ட நடவடிக்கை மேற்கொண்டதே அதற்கு முக்கிய காரணமாக அது குறிப்பிட்டது.
-------
ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி விற்பனை முகப்புகளில், சிகரெடுக்களைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய நிலையில் சிகரெட்டுகளை விற்கும் 51 ஆயிரம் கடைகளுக்கு அந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளது.
2024 பொது சுகாதாரத்தை முன்னிருத்திய புகைப்பது சார்ந்த பொருட்களைக் கட்டுப்படுத்தும் சட்டம், கடந்த ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி அமலாக்கம் கண்டதை அடுத்து அத்தடை விதிக்கப்படுகிறது.
சில வெளிநாடுகளில் ஆக்கப்பூர்வமான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது போல் சிகரெட்டுகளை மூடப்பட்ட பெட்டகங்களினுள் வைப்பது ஏற்புடையதாக இருக்கும் என அமைச்சு கருதுகிறது.
--------
நோன்பு பெருநாள் காலக்கட்டத்தில் காவல்துறை பல இடங்களில் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்புவோர் வீடுகளில், கொள்ளையடிக்கப்படும் சம்பவத்தைக் களையும் நோக்கில் அந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.
அவ்வகையில் வெளியூருக்குச் செல்வோர் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று அது தொடர்பிலான பாரத்தைப் பூர்த்திச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
அல்லது Volunteer Smartphone Patrol எனும் செயலி வாயிலாகவும் பொதுமக்கள்
தகவல் தெரிவிக்கலாம்.
---------
Negeri Sembilan-னில் Port Dickson, சிலாங்கூரில் Sabak Bernam, Kuala Selangor, கிள்ளான், Kuala Langat மற்றும் Sepang-கிலும் கனமழை எச்சரிக்கை.
அப்பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
--------
ஆகக் கடைசி தகவல்படி ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2107-ஆக குறைந்துள்ளது.
இதனிடையே சபாவில் 580க்கும் மேற்பட்டோர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் உள்ளனர்.
---------
வேலை மோசடி கும்பலிடம் சிக்கி மியான்மரில் மீட்கப்பட்ட மேலும் 24 மலேசியர்கள், இன்று தாயகம் திரும்புவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather