← Back to list
நெரிசலைக் குறைக்க அடுக்குமாடி பள்ளி !
Mar 21, 2025

நகர்புறங்களில் உள்ள பள்ளிகளில் நெரிசலைக் குறைக்க அடுக்குமாடி பள்ளி கட்டிடங்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன!
கற்றல் கற்பித்தலுக்கு தோதான, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல வசதியுடைய சுற்றுச்சூழல் ஏற்படுத்தித் தரப்படுவதை இது உறுதிச் செய்யும் என, பிரதமர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு இன்னும் ஆழமான தரமான கல்வி, அதுவும் இலக்கவியல் தொழில்நுட்பம் மாதிரியான துறைகளை இன்னும் ஆராயவும் இது உதவும் என எதிர்ப்பார்க்கப்ப்டுகிறது.
இதற்கு உதவ பெருநிறுவனங்களின் ஒத்துழைப்பும் நாடப்படும் என்றார் அவர்.
----
மாணவர்களை சமூக ஊடக உள்ளடக்கங்களுக்காகப் பயன்படுத்தாதீர்!
ஆசிரியர்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளார் தொடர்புத்துறை அமைச்சர் Datuk Fahmi Fadzil.
அம்மாதிரியான உள்ளடக்கங்களை சில பொருப்பில்லா தரப்பு, சிறார் பாலியல் குற்றச்செயல் உள்ளிட்ட தகாத நோக்கங்களுக்கப் பயன்படுத்தக் கூடும் என, அவர் கூறினார்.
மாணவர்களை சிறார் பாலியல் குற்றங்களுக்கு ஆளாவதைத் தடுத்து அவர்களைப் பாதுகாக்கும் கடப்ப்பாடு, ஆசிரியர்களுக்கும் இருக்கிறது என்றார் அவர்.
-----
Visit Malaysia 2026 திட்டத்தின் அறிமுக விழாவை ஏற்று நடத்தும் இடமாக மலாக்கா அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது.
அத்திட்டம் வரும் செப்டம்பரில் 2025 உலக சுற்றுலா தினம், உலக சுற்றுலா மாநாடு ஆகியவற்றுடன் ஒன்றி வரும் என சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு கூறியது.
-----
ஆகக் கடைசி தகவல்படி மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எண்ணாயிரத்து 700ஆக உள்ளது!
ஆக அதிகமாக ஏழாயிரத்து ஐநூருக்கும் மேற்பட்டோர் ஜொகூரில் உள்ள வேளை, எஞ்சியவர்கள் சபா மற்றும் சரவாக்கில் இருக்கின்றனர்.
-----
மக்களவையின் ஆற்றலை அதிகப்படுத்தும் நோக்கிலான புதிய நாடாளுமன்றச் சேவை சட்ட மசோதாவை மேலவை அங்கீகரித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather