← Back to list
மலாக்காவுக்கு 4 லட்சம் ரிங்கிட் !
Mar 14, 2025

நோன்பு பெருநாளை முன்னிட்டு, மலாக்கா அரசாங்கம், தனது ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 4 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது!
அப்பெருநாள் கொண்டாட்டத்தின் போது, வசதி குறைந்த மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க, அந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.
அந்த நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்றார் அவர்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தனித்து வாழும் தாய்மார்கள், வசதி குறைந்தவர்கள் என, மொத்தம் 2,000 பேர் அந்நிதி உதவியால் பயனடைவர் என அவர் கூறினார்.
--------
மருந்துகளில் அவற்றின் விலைகளை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற விதிமுறை, அப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல !
மாறாக, அது வாங்குபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே என உள்நாட்டு வாணிக வாழ்க்கைச் செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது.
--------
ஜொகூரில் நோன்பு மாத்தத்தின் முதல் வாரத்தில், நாளில் 3,200-க்கும் மேற்பட்ட டன் உணவுக் கழிவுகள், குப்பைக் கிடங்குகளில் அகற்றப்பட்டன.
கடந்தாண்டு அதே காலகட்டத்த்தில் அகற்றப்பட்ட, 4,500-க்கும் அதிகமான டன் உணவுக் கழிவுகளை விட இது குறைவே என மாநில வீட்டுவசதி ஊராட்சி குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
----------
ஜொகூர் Ulu Tiram காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியவரின் மூன்று குடும்ப உறுப்பினர்கள் மீதான பயங்கரவாத வழக்கு விசாரணை அக்டோபரில் தொடங்கும் !
தாக்குதல் நடத்தியவரின் தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள், பயங்கரவாத சித்தாந்தம் தொடர்பான தகவல்களை வேண்டுமென்றே மறைத்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
----------
கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather