← Back to list
Touch n Go eWallet; புதிய அம்சம் அறிமுகம் !
Mar 14, 2025

Touch n Go eWallet செயலியில் LPR கார் நிருத்தும் கட்டண வசதியை உடைய புதிய அம்சம் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.
அப்புதிய அம்சம், வாகன எண் பட்டையைக் கண்டறியும் ஆற்றல் உடையது.
அதன் மூலம் பயனர்கள் கார் நிருத்துமிடங்களில் TouchNgo அட்டையைப் பயன்படுத்தாமலேயே கட்டணத்தை செலுத்தலாம்.
அப்புதிய அம்சம் இப்போதைக்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பயன்படும்; வரும் காலங்களில் அது இன்னும் அதிகமான இடங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.
TouchNGo செயலி வைத்திருப்பவர்கள் அந்த LPR அம்சத்தில் சென்று தங்களின் வாகன எண்ணைப் பதிந்துக் கொள்ளலாம்.
-------
வாக்குமூலம் அளிக்க மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய தலைமையகத்திற்கச் சென்றுள்ளார் DS Ismail Sabri Yaakob!
ஊழல் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டு தொடர்பில், நேற்று அவர் ஆறு மணி நேரங்களுக்கு மேல் வாக்குமூலம் அளித்தார்.
அவ்விவகாரம் தொடர்பில் MACC அவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் 170 மில்லியன் ரிங்கிட்டையும் 16 கிலோகிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தது.
-------
தலைநகர், Taman Danau Kotaவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 42ஆவது மாடியில் மூன்று வயது சிறுமி உள்ளிட்ட நால்வர் மின்தூக்கியினுள் சிக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது!
ஏறக்குறைய மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு, தீயணைப்பு மீட்புப் படையினரின் உதவியோடு அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
-------
ஜொகூரில், ரமலான் சந்தையில் திருட்டுத்தனமாக வணிகம் செய்து வந்த நான்கு கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!
அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும், வெளிநாட்டவரைக்கு வேலைக்கு வைத்த முதலாளி ஒருவருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
-------
தனியார் மருத்துவர்களான கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பில் இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் இறங்கியிருக்கின்றது சுகாதார அமைச்சு!
அதன் தொடர்பிலான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என, KKM சொன்னது.
-------
பொதுச் சேவை ஊழியர்களுக்கு நோன்பு பெருநாள் சிறப்பு நிதியுதவு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு CEUPACS அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather