← Back to list
மின்னியல் சிகரட் அபாயம்
Mar 10, 2025

மின்னியல் சிகரட் அல்லது வேப் வடிவிலான மிட்டாய்கள் உள்ளிட்ட அபாயமான உணவுப் பொருட்கள் பள்ளி வளாகத்தினுள் விற்கப்படாது!
அதற்கு உண்டான நடவடிக்கைகளைத் தமது தரப்பு மேற்கொண்டு வருவதாகக் கல்வி அமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்த வியாபாரி மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
எனினும் பள்ளிக்கு வெளியே அவ்வகை உணவு விற்பனையைத் தடுப்பதில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், உள்ளூர் அதிகாரத்துவ தரப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புத் தேவை என்றார் அவர்.
தற்போது வேப் வடிவிலான மிட்டாய் ஒன்று சந்தையில் அறிமுகமாகி பிரபலமாகியிருப்பதாக, பினாங்கு பயனீட்டாளர் சங்க முன்னதாகக் கூறியிருந்தது.
-------
தாய்லாந்து Sungai Golok பகுதியில் இருக்கும் மலேசிய மாணவர்கள், எந்நேரமும் பாதுகாப்பை முன்னிருத்தி, மாணவர் தங்கும் விடுதியிலேயே இருக்கும்படி, கல்வி அமைச்சு வலியுறுத்தியிருக்கிறது.
அச்சம்பவத்தை அடுத்து, மாண்வர்களின் பாதுகாப்புக்காக தமது தரப்பும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவ்வமைச்சு சொன்னது.
கடந்த சனிக்கிழமை அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டு மற்றும் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலியாகி, ஏறக்குறைய எண்மர் காயமடைந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.
-------
இதனிடையே தென் தாய்லாந்துக்கு எல்லா அத்யாவசியமற்ற பயணங்களையும் ஒத்தி வைக்குமாறு மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!
அதோடு Pattani, Yala, Narathiwat ஆகிய மாகாணங்களில் உள்ள மலேசியர்கள், Songklaவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்களைப் பதிந்துக் கொள்ளுமாறும் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியது.
அந்த தாக்குதல் அச்சம்பவங்கங்களில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதைக் காவல் துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.
-------
கடந்த சனிக்கிழமை Jordan-னில் சாலை விபத்தில் சிக்கிய நான்கு மலேசிய மாணவர்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்!
அதற்காக அங்குள்ள மலேசிய கல்வி அலுவலகத்தின் ஒத்துழைப்பை நாடி வருவதாக, உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abd Kadir தெரிவித்தார்.
அவர்களில் மூவர் சுய நினைவிற்குத் திரும்பியிருக்கின்றனர்; மற்றொருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை இன்னமும் தேவை பட்டு வருவதாக அவர் கூறினார்.
-------
தலைநகர் Masjid Jamekவிலும், Mid Valley அருகிலும் காணப்பட்ட முதலையைப் பிடிக்க அவகாசாம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வானிலை மோசமாக இருப்பதோடு ஆறுகளில் நீரோட்டமும் வலுவாக இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather