Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Fahmi Fadzil-லுக்கு டத்தோ பட்டம்

Mar 07, 2025


fahmi fadzil-லுக்கு டத்தோ பட்டம்

இணைய பாலியல் தொந்தரவும் ஒரு குற்றமே! 

Deepfake மாதிரியான செயற்கை நுண்ணறிவு தயாரிப்பு உள்ளடக்கங்களும் அதிலடங்கும் என, மகளிர் உதவி அமைப்பு WAO தெரிவித்திருக்கிறது. 

அம்மாதிரியான இணைய குற்றங்களிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க, அரசாங்கம் தனது முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என, அவ்வமைப்பின் மூத்த ஆலோசக அதிகாரி Zati Hanani கூறினார். 

அதற்காக செயற்குழு ஒன்றை அமைப்பது மாதிரியான முயற்சிகள் எடுக்கப்படலாம் என்றார் அவர்.

நாளை அனுசரிக்கப்படும் அனைத்துலக மகளிர் தினத்தை ஒட்டி, அவர் நம்மோடு அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார். 

------- 

மாணவர்களிடையே மின்னியல் சிகரட் அல்லது வேப் பயன்பாட்டைத் தடுக்க, பள்ளி நிர்வாகங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன! 

ஆனால் அதில் ஆசிரியர்களுக்கு சில சவால்கள் இருப்பதை, தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் NUTP மறுக்கவில்லை. 

மறைவான இடங்கள், அல்லது குறைந்த மேல்பார்வை உடைய கழிவறை மாதிரியான இடங்களில், வேப் புகைக்கும் மாணவர்களை எளிதில் கண்டு பிடிக்க முடியாதததும் அதிலடங்கும் என அச்சங்கம் கூறியது. 

முன்னதாக, வேப் புகைப்பது கண்டறியப்படும் மாணவர்கள், பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படலாம் என கல்வி அமைச்சு எச்சரிக்கை வெளியிட்டிருந்தது. 

-------  

ஆகக் கடைசி தகவல்படி, நாட்டில் முன்னூற்று முப்பதுக்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்! 

ஏறக்குறைய இருநூற்று 84 பேர் மலாக்காவிலும், எஞ்சியவர்கள் நெகிரி செம்பிலானிலும் உள்ளனர். 

--------  

ஜொகூரில் இதுவரை தொழுநோய் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை! 

முன்னதாக சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் இந்த தொழுநோய் பரவல் இருந்ததாக அந்தந்த மாநில சுகாதாரது துறை தெரிவித்திருந்தன. 

-------  

பஹாங் சுல்தான் ரமலான் மாத சிறப்பு உதவிநிதியாக, ஆயிரம் ரிங்கிட் வழங்குவதாக TikTokகில் பரவும் செய்தியை நம்ப வேண்டாம்! 

அது அடிப்படையற்ற தகவல் என்பதை அரண்மனை Facebook வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கிறது. 

-------  

தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzilலுக்கு மாமன்னர் Sultan Ibrahim இன்று டத்தோ பட்டம் கொடுத்து கெளரவித்தார். 

கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr Zaliha Mustafaவுக்கு Datuk Seri பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us