← Back to list
SOSMA-வுக்கு நீதிமன்றமா?
Feb 19, 2025

SOSMA எனப்படும் பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படலாம்.
உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail அதனைக் கோடி காட்டினார்.
ஊழல், சிறார் பாலியல் குற்றங்கள், இணையக் குற்றங்கள் போன்றவற்றைக் கையாளும் சிறப்பு நீதிமன்றங்களைப் போலவே, இந்த உத்தேச SOSMA சிறப்பு நீதிமன்றமும் இருக்குமென்றார் அவர்.
கைதானவர்களை 28 நாட்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைக்க வகை செய்யும் SOSMA சட்டத்தில், அரசாங்கம் கொண்டு வரவுள்ள சீர்திருத்தங்களில் அதுவும் ஒரு பகுதியாகும்.
SOSMA-வின் கீழுள்ள 70-க்கும் மேற்பட்ட குற்றங்களில் சிலவற்றுக்கு, பிணையில் விடுவிக்கும் பரிந்துரையும் அவற்றிலடங்கும்.
--------
சிங்கப்பூரில் நாளை தூக்கிலடப்படவுள்ள, மலேசிய ஆடவரான பன்னீர்செல்வமின் மரண தண்டனையை நிறுத்தும்படி, Commonwealth வழக்கறிஞர்கள் சங்கம், சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது !
சிங்கப்பூர் அதிபர், தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பன்னீரின் மரண தண்டனை நிறைவேற்றத்தை, நிறுத்த வேண்டுமென அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை, அனைத்துலக மனித உரிமைகள் தரத்தை பூர்த்தி செய்யவில்லை என அச்சங்கம் வாதிட்டது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில், 2017-ஆம் ஆண்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, பன்னீர்செல்வத்துக்கு கட்டாய மரண தண்டனை விதிகக்ப்பட்டது.
அவரின் கருணை மனு விண்ணப்பமும், முந்தைய சிங்கப்பூர் அதிபரால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-------
அரசாங்கம் தற்போது இந்தியா,இலங்கை, வங்காளதேசம், நேப்பாளம் ஆடிய நாடுகளுடன் பேச்சுசுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது !
வெளிநாட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான செலவைப் பற்றி, மனிதவள அமைச்சு அந்நாடுகளுடன் பேசி வருகிறது.
வியட்நாம், கம்போடியா மற்றும் இந்தோனேசியா, குறிப்பாக வீட்டுப் பணியாளர்களை, வேலைக்கமர்த்துவதற்கான செலவுகள், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அவ்வமைச்சு கூறியது.
---------
கூட்டரசு பிரதேசத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது குறித்த புகாரகள், 12 மணி நேரத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும் !
அதற்கான கால அவகாசம் முன்னதாக, 24 மணிநேரமாக இருந்தது.
அது, சாலையின் நிலைமையை மேம்படுத்தும் மற்றும் சாலை பயனர்களுக்கு, பாதுகாப்பை உறுதி செய்யும், அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
-------
இதனிடையே, நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,700-க்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 8 மரணங்கள் பதிவாகின.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather