← Back to list
டீசல் மானியம் குறித்த விவாதம் !
Feb 15, 2025

நெல் மற்றும் அரிசித் தொழிலில் சேவை வழங்குனர்கள், நற்செய்தியைப் பெறலாம் !
அவர்களுக்கான டீசல் மானியம் குறித்த விவாதம் இறுதி கட்டத்தில் உள்ளது.
அந்த இறுதிகட்ட விவாதத்தில், உள்நாட்டு வாணிக வாழ்க்கைச் செலவீன அமைச்சு மற்றும் நிதியமைச்சு ஈடுபட்டிருப்பதாக, விவசாய, உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உழவு, போக்குவரத்து மற்றும் இதர உபகரணங்கள் போன்ற சேவை வழங்குனர்களுக்கு, மானியம் கிடைப்பதை உறுதி செய்யவே, அதன் நோக்கிலானது.
---------
MCMC-யும், PDRM-மும், 268-வது ஆட்சியாளர்கள் கூட்டம் தொடர்பில் போலி செய்திகளைப் பரப்பும் நபர்பளை அடையாளம் கண்டுள்ளன !
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தொடர்புத் துறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
அக்கூட்டத்தில் எந்தவொரு வாக்கெடுப்பும் நடைபெறவில்லை.
அதில் அனைத்து ஆட்சியாளர்களும் கலந்துகொள்ள வேண்டும்; ஆனால் மருத்துவ சிகிச்சை காரணமாக பேரரசர் வெளிநாட்டிற்கு பயணமாகியிருப்பதால், வாக்கெடுப்பு நடைபெறவில்லையென அவர் தெளிவுப்படுத்தினார்.
----------
முஸ்லிம் அல்லாத மத விவகாரங்களுக்கான அமைச்சரை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசாங்கம் உடன்படவில்லை !
தற்போது நடப்பில் இருக்கும், மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர், ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் Harmoni எனப்படும் மத நல்லிணக்க செயற்குழு ஆகியவை போதுமானவை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அந்த பரிந்துரை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்மொழிந்தது எனவும் அதை அரசாங்கமோ அல்லது அமைச்சரவையில் உள்ளவர் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் அவர் கூறினார்.
---------
KL Jalan Klang Lama-வில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நபருக்கு அடைக்கலம் வழங்கிய ஓர் ஆடவருக்கு, ஈராயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அங்குள்ள இரவு கேளிக்கை மையமொன்றின் வெளியே, இரு வாகனங்கள் வேண்டுமென்றே ஒரு குழுவை மோதி, சிலரைக் காயப்படுத்தின.
--------
Negeri Sembilan Kuala Pilah-வில், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில், நால்வர் மீதான விசாரணையை தொடர, செஷன்ஸ் நீதிமன்றம் இன்று முடிவு செய்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather