Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தைப்பூச சிறப்புத் தொகுப்பு!

Feb 07, 2025


 

தைப்பூச சிறப்புத் தொகுப்பு!

சிலாங்கூர், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலையத்திற்குச் செல்லும் பாதையின் தற்காலிக மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன! 

இம்முறை தைப்பூசத்தின் போது 20 லட்சம் பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் பத்துமலைக்கு வருவர் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், சுமூகமான கொண்டாட்டத்தை உறுதிச் செய்ய அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பொதுப்பணி அமைச்சர் தெரிவித்தார். 

நிரந்தமான பழுதுபார்ப்புப் பணிகள், தைப்பூசத் திருவிழாவுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் என, Datuk Seri Alexander Nanta Linggi கூறினார். 

பத்துமலையில் நடைபாதையையும் இதர சில வசதிகளையும் மறுசீரமைக்கு, பத்து லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார். 

-------- 

தைப்பூசத்தை ஒட்டி Rapid bus இலவச நின்று நின்று செல்லும் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரவிருக்கிறது! 

பொதுமக்கள் பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலலையத்திற்குச் செல்ல ஏதுவாக KLலில் 30 பேருந்துகளும், அருள்மிக தண்டாயுதபானி ஆலையத்திற்குச் செல்ல ஏதுவாக பினாங்கில் 12 பேருந்துகள் செயல்படவிருக்கின்றன.  

11ஆம் தேதி காலை ஆறு மணி முதல், நள்ளிரவு பண்ணிரண்டு மணி வரை பத்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வரும் என Rapid bus தெரிவித்தது.  

மேல் விவரங்களுக்கும் பேருந்து அட்டவணைக்கும் RapidKL மற்றும் Rapid Penang, Facebook மற்றும் Instagramமை வலம் வாருங்கள்.  

------   

தைப்பூசத்தை ஒட்டி, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள Komuter ரயில்களுக்குள்  மிதிவண்டிகளைக் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது!

ரும் சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை அத்தடை அமுலில் இருப்பதாக KTM அறிவித்துள்ளது. 

இதனிடையே பத்தாம் மற்றும் பதினோராம் தேதிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த இலவச ரயில் சேவைக்கு, வழக்கமான ரொக்கமில்லா கட்டண முறையையே பயன்படுத்தும் படி பயணிகளை அறிவுறுத்தப்படுகின்றனர். 

------- 

மற்றொரு பக்கம் தைப்பூசத்தை ஒட்டி சிலாங்கூர் பத்துமலையைச் சுற்றிலும் ஏழு பாதைகள்  மூடப்படுகின்றன. 

வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி தொடங்கி,14 ஆம் தேதி வரை அச்சாலைகள் கட்டங்கட்டமாக மூடப்படு என, மாநில காவல் துறை தலைவர் தெரிவித்தார். 

-------- 

அதே போல பினாங்கு Georgetown-னிலும் தங்கரத மற்றும் வெள்ளிரத ஊர்வலத்தை ஒட்டி, பத்தாம் தேதி காலை பத்து மணியிலிருந்து 12ஆம் தேதி நள்ளிரவு வரை சில முக்கியச் சாலைகள் மூடப்படும். 

அண்மைய போக்குவரத்து நிலவரங்களுக்கு Astroradio traffic சமூக ஊடகங்களை வலம் வரலாம். 

-------  

பேராக் ஈப்போவில் தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வரும் பத்தாம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு, வெள்ளி ரத ஊர்வலத்தின் போது மதுபானம் அருந்தவும், விற்கவும் அம்மாநில அரசு தடை வதிக்கிறது. 

பொதுமக்களின் வேண்டுகோளின் பேரில் அறிவிக்கப்பட்டுள்ள இத்தடையை மீறீ, மதுபான பயன்பாடு இருக்குமாயின், காவல் துறை அதனை ஒரு போதும் விட்டுக் கொடுக்காது என மாநில சுகாதார செயற்குழு தலைவர் A  சிவனேசன் தெரிவித்தார். 

------- 

பிரதமர் DSAI இன்று மாலை பத்துமலை திருத்தளத்திற்கு வருகை புரியவுள்ளார். 

இந்தியர்களுடன் ஒன்றி, தைப்பூசக் கொண்டாட்டத்திற்கான அவர்களின் ஆயத்த வேலைகளைப் பார்வையிட அன்வார் வருவதாக, தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்னன் பெர்னாமாவிடம் தெரிவித்தார். 

பத்துமலை, ஈப்போ, Georgetown, Sungai Petani ஆகியவற்றின் புகழ்பெற்ற ஆலையங்களிலிருந்து Astro கொண்டு வரும் 24 மணி நேர தைப்பூச நேரடி ஒளிபரப்பை, Astro அலைவரிசை 202, Astro Go, On Demand, Sooka ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us