← Back to list
தைப்பூசத்திற்கு வசதி !
Feb 06, 2025

தைப்பூசத்தை முன்னிட்டு, பினாங்கு தண்ணீர்மலையிலும், சிலாங்கூர் பத்துமலை திருத்தலத்திலும், பக்தர்கள் ஓய்வெடுக்கும் இடம் ஏற்படுத்தித் தரப்படும் !
KESUMA MADANI திட்டம் வாயிலாக அந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மனிதவள அமைச்சர் Steven Sim தெரிவித்துள்ளார்.
பத்துமலையில் 700 பேரும், தண்ணீர்மலையில் 500 பேரும் ஓய்வெடுக்கும் பகுதி தயார் செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.
கடந்தாண்டு அவ்விரண்டு ஆலயங்களிலும் மேற்கொள்ளப்பட்ட அத்திட்டம், நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அவற்றை இவ்வாண்டும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாரவர்.
---------
இதனிடையே, அனைவரும் தைப்பூச நேரலை ஒளிபரப்பைப், பிப்ரவரி 9, இரவு 8 மணி முதல், பிப்ரவரி 11, இரவு 10 மணி வரை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக TV, Astro GO, On Demand மற்றும் SOOKA ஆகியவற்றில் கண்டு மகிழலாம்.
நன்றி கந்தா எனும் கருப்பொருளில் மலரும் இந்த 3-நாள் நேரலை ஒளிபரப்பில், முதன்முறையாக ரத ஊர்வலக் காட்சிகள் உட்படப் பத்துமலை, ஜார்ஜ்டவுன், ஈப்போ மற்றும் சுங்கை பெட்டானி ஆகியவற்றிலுள்ளப் புகழ்பெற்ற உள்ளூர் ஆலயங்களிலிருந்து நேரடி ஒளிபரப்பு வழங்கப்படும்.
அனைத்து மலேசியர்களும் ராகாவில் 24 மணி நேர பக்திப் பாடல்களைக் கேட்டு இரசிக்கலாம்.
----------
பஹாங் Bentong-கில், ஒருவர் பலியான Helicopter விபத்து குறித்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விமான விபத்து விசாரணை பணியகம், அச்சம்பவத்தை விசாரிக்கும் என மலேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அச்சம்பவத்தில் இந்தோனேசிய ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த Helicopter-ரைச் செலுத்திய விமானி, காயமெதுவுமின்றி உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
-----------
வாகன சோதனை மையங்களைத் திறப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பல புதிய நிறுவனங்களை அரசாங்கம் அறிவிக்கும்.
அது குறித்த அறிவிப்பு நாளை தமதமைச்சு வெளியிடும் என போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்துள்ளார்.
---------
பெண்கள் விளையாட்டுகளில், திருநங்கை விளையாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மீண்டு பதவிக்கு வந்ததிலிருந்து திருநங்கைகளை குறி வைத்து அவர் மேற்கொண்ட புதிய நடவடிக்கை இதுவாகும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather