← Back to list
தைப்பூசம் ; இலவச Ferry சேவை !
Feb 04, 2025

தைப்பூசத்தை முன்னிட்டு, பினாங்கில் அடுத்த வார திங்கட்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை, 24 மணி நேர இலவச Feri சேவை வழங்கப்படுகிறது.
தைப்பூச மறுநாளான 12-ஆம் தேதி அதிகாலை மணி 2.30 வரை, அந்த இலவச சேவை நீட்டிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Jetty-யிலிருந்து Adventist வரை, 20 மற்றும் 60 நிமிட இடைவெளியில், 12 பேருந்துகளை Rapid Penang வழங்கும்.
இவ்வேளையில், இவ்வார ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, அடுத்த வார புதன்கிழமை வரை, கிள்ளான் பள்ளத்தாக்கு KTM பயணிகள், 24 மணி நேர ரயில் சேவையை அனுபவிக்கலாம்.
அந்நாட்களில், 44 கூடுதல் ரயில் சேவைகள் வழங்கப்படுவதாக KTMB அறிவித்துள்ளது.
தொடர்ந்து, மக்கள் பிப்ரவரி 10, 11 ஆகிய தேதிகளில், இலவசமாக ரயிலில் பயணிக்கலாம்.
அதுமட்டுமில்லாமல், அவ்விரு நாட்களும், 10 நிமிட இடைவெளியில், Pasar Seni hub, Gombak LRT மற்றும் Kg Baru MRT-இலிருந்து, பத்துமலைக்கு இலவச Shuttle சேவைகளை, Prasarana Malaysia வழங்குகிறது.
--------
இதனிடையே, இவ்வாண்டு தைப்பூச தினத்தன்று, 12 முதல் 15 லட்சம் பக்தர்கள் சிலாங்கூர், பத்துமலை முருகன் கோவிலுக்கு வருவர் என எதிர்ப்பார்க்கப்பபகிறது!
அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் விதமாக, மருத்துவ மற்றும் அவசரகால சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தேவஸ்தான தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
இம்முறை மக்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், மேலாண்மையை செம்மைப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
--------
மற்றொரு பக்கம், அப்பெருவிழா நெருங்கி வரும் வேளையில், முக்கிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது !
குறிப்பாக தேங்காய் மற்றும் பூக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுவதாக, Bernama மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரியவந்துள்ளது.
---------
சீனப் பெருநாளுக்கு அறிவிக்கப்பட்ட டோல் கட்டண கழிவு, இவ்வாண்டு அனைத்து முக்கிய பண்டிகைகளுக்கும் வழங்கப்படும் என பொதுப்பணி துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த கழிவு 50 விழுக்காடாகும்.
-------
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,700-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 16 மரணங்கள் பதிவாகின.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather