← Back to list
சட்டம் உங்கள் கையில் அல்ல !
Jan 21, 2025

சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளாதீர் !
அரசாங்க பேச்சாளர் Fahmi Fadzil, பொதுமக்களை அவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
எந்த குற்றச் சம்பவங்களாக இருந்தாலும், அதனை விசாரிக்க காவல்துறையினர் இருக்கின்றனர்; அதற்கு வழிவிடும்படி Fahmi கேட்டுக்கொண்டார்.
அண்மையில் திரங்கானுவில் மாற்றுத்திறனாளி ஆடவர் ஒருவர் தாக்கப்பட்டதை Fahmi மேற்கோள்காட்டினார்.
மனநலம் பாதிக்கப்பட்ட அந்நபர் செலுத்திய மோட்டார் சைக்கிள், விவசாயச் சந்தைக் கடை ஒன்றை மோதியதில், அங்குள்ள சிலர் ஆத்திரமடைந்து அந்நபரைக் கடுமையாகத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
-------
இவ்வேளையில், பொது பல்கலைக்கழகங்களில் WIFI இணையச் சேவையை மேம்படுத்த, 60 கோடி ரிங்கிட்டுக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளதாக Fahmi கூறினார்.
அப்பல்கலைக்கழகங்களில் WIFI இணைப்பு மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து, அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
-------
பெருநாள் காலங்களில் இனி இலவச டோல் கட்டணச் சலுகை வழங்கப்படாது என்றும், அதற்கு பதிலாக அரசாங்கம் மாற்று நடவடிக்கையைச் செயல்படுத்தும் எனவும் பொதுப்பணித் துறை அமைச்சர் Datuk Alexander Nanta Linggi தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டே அமைச்சரவை அம்முடிவை எடுத்து விட்டது என்றாரவர்.
-------
சிலாங்கூர் கிள்ளானில் உள்ள, எரிவாயு சேமிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 32 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் வெடிப்பு நடந்த இடத்தைச் சுற்றி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------
அமெரிக்க அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, Donald Trump அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் !
அவற்றில் குறிப்பாக, அமெரிக்காவில் இனி ஆண் - பெண் ஆகிய இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்; ராணுவத்தில், மாற்று பாலினத்தவர்களுக்கு தடை எனக் கூறிய Trump, சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு்ம் தடை என்றார்.
WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பில் இருந்து, அமெரிக்கா வெளியேறும் எனவும் Trump அறிவித்துள்ளார்.
TikTok-கைத் தடை செய்யும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை, 75 நாள்களுக்குத் தள்ளி வைக்கும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather