← Back to list
மாமன்னர் உத்தரவை மதியுங்கள் !
Jan 04, 2025

மாமன்னர் உத்தரவுக்கு மதிப்பளித்து, Dato' Seri Najib Razak ஆதரவு பேரணியை அம்னோ ரத்துச் செய்துள்ளது !
மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவை நிலைநிறுத்தும் கொள்கையின் அடிப்படையிலும், தேசிய காவல்படை தலைவரின் அறிவுறுத்தலின்படியும், அம்னோ அந்த பேரணியைத் தொடர வேண்டாம் என முடிவுச் செய்துள்ளது.
Najib Razak-கிற்கு நீதி வழங்குவதில் மாமன்னரின் கருணை, அதிகாரத்தின் மீது தமது கட்சிக்கு முழு நம்பிக்கை உள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
----------
இதனிடையே, பேரரசரின் உத்தரவுக்கு மதிப்பளித்து, பேரணிகளில் பங்கேற்க வேண்டாம் என தேசிய காவல்படை தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
மாமன்னர் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பான எந்த ஒரு கூட்டத்திலும், மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என Tan Sri Razarudin Husain தெரிவித்துள்ளார்.
அதையும் மீறி அக்கூட்டங்களில் கலந்துகொள்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்துள்ளார்.
----------
அடுத்த வார செவ்வாய்கிழமை Port Dickson மற்றும் Seremban-னில் உள்ள சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படும் !
Negeri Sembilan நீர் விநியோக நிறுவனம் அதனை தெரிவித்துள்ளது.
----------
Pahang Bentong-கில், இரண்டு சீன நாட்டு சுற்றுப் பயணிகளை கடத்திச் சென்று, அவர்களிடம் கொள்ளையடித்ததாக நம்பப்படும் நான்கு உள்ளூர் ஆடவர்களை, காவல்துறை வலைவீசி வருகிறது.
---------
இந்தோனேசியாவில் 30 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், என்மர் பலியாகியுள்ளனர்.
எஞ்சியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather