← Back to list
உரிமம் பெறுவதில் 2 தளங்கள் கால்பதித்துள்ளன
Dec 26, 2024

Telegram-மும், WeChat-டும் மலேசியாவில் செயல்பட, தங்களின் உரிமம் பெறும் செயல்முறையைத் தொடங்கியுள்ளன.
சமூக ஊடக தளங்களுக்கான உரிமம் பெறும் முறை, அடுத்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
அந்த உரிமம், இணைய பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் இணைய செய்தி மற்றும் சமூக ஊடக சேவை வழங்குநர்கள் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, அரசாங்கம் முன்னதாக கூறியிருந்தது.
----------
வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பெய்யும் தொடர்மழை காரணமாக, மூன்று நாட்களில் கிளந்தானில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது !
நீர்பாசன, வடிகால் துறை அவ்வாறு கணித்துள்ளது.
அது, Tumpat, Pasir Mas, Kota Bharu, Pasir Puteh, Bachok, Tanah Merah, Machang, Kuala Krai மற்றும் Jeli ஆகிய மாவட்டங்களை உட்படுத்தியிருக்கும் என அத்துறை கூறியது.
---------
வரும் சனிக்கிழமை தொடங்கி, மூன்று நாட்களுக்கு சபாவில் பல பகுதிகளில் தொடர் மழை பெய்யலாம் எனவும், கிளாந்தானிலும், தெரெங்கானுவிலும் இவ்வாரம் ஞாயிறு தொடங்கி அதே நிலைமை ஏற்படக்கூடும் எனவும் Met Malaysia கணித்துள்ளது.
-----------
ஜொகூர் Batu Pahat-டில், தனது பாட்டி உட்பட குடும்ப உறுப்பினர்களின் மோசமான வீடியோக்களை பதிவு செய்ததற்காக 23 வயது இளைஞருக்கு நான்கு நாட்கள் சிறைத்தண்டனையும் 4,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
----------
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,300-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 10 மரணங்கள் பதிவானதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather