← Back to list
தமிழுக்கு ஆசிரியர் பற்றாக்குறையா?
Dec 19, 2024

நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில், 8,709 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இன்னும் 184 இடங்கள் நிரப்பப்படவில்லையென கல்வியமைச்சு மேலவையில் தெரிவித்துள்ளது.
தமிழ் மொழிப் பாடத்துக்கு 1,420 ஆசிரியர்களின் தேவை இருப்பின், அதைவிட கூடுதலாக 277 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல், இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி பாடத்துக்கு, 605 ஆசிரியர்களின் தேவை இருப்பின், அதைவிட கூடுதலாக, 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
---------
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி Datin Seri Rosmah Mansor, 7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான 17 குற்றச்சாட்டுகளிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.
அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்யக்கோரி, Rosmah தாக்கல் செய்த மனுவை ஏற்று, உயர்நீதிமன்ற நீதிபதி K.முனியாண்டி இன்று அவ்வாறு தீர்ப்பளித்தார்.
இருப்பினும், அவரின் விடுவிக்கும் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக சட்டத்துறை அலுவலகம் உறுதியளித்ததால், Rosmah-வின் சட்டச் சிக்கல்கள் இன்னும் முடிவடையவில்லை.
இதைத் தவிர, ரோஸ்மா தனது 1.2 பில்லியன் ரிங்கிட் Solar Hybrid எனப்படும் சூரிய கலப்பு முறை திட்ட ஊழல் வழக்கில், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறார்.
---------
KL Jalan Masjid India-வில், நில அமிழ்வு ஏற்பட்ட இடம், இம்மாத இறுதியில் திறக்கப்படும் என கோலாலம்பூர் மாநகர் மன்றம் Malaysia Gazette-யிடம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அவ்விடம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தான் முழுமையாக பொதுமக்களுக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
----------
SOSMA-வின் கீழ் தடுத்து வைகப்பட்டிருந்த தனது கணவரை விடுவிப்பதற்கு உதவுவதாகக் கூறி வந்த பெண்ணிடம், என்பதாயிரம் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் அமலாக்க அதிகாரி, ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுகிறார்.
----------
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 14 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather