← Back to list
தாக்குதல்களுக்கு மத்தியில் மலேசியர்கள் !
Dec 18, 2024

சிரியாவிலிருந்து மலேசியர்களை தாயகத்திற்கு கொண்டு வரும் உடனடி திட்டம் எதுவும் மலேசியாவுக்கு இல்லை !
மலேசிய தூதரகம், அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருவதாகவும், அங்கு நமது நாட்டை சேர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் எனவும் Wisma Putra தெரிவித்துள்ளது.
அங்கு மாணவர்கள் உட்பட 50 மலேசியர்கள் இருக்கின்றனர்.
அந்நாட்டில், அதிபர் al-Assad ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால், அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு குறித்து அது தகவல் வெளியிட்டுள்ளது.
----------
அண்மையில், வெளியுறவு அமைச்சர் உணவகமொன்றில் புகைபிடிக்கும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவலானதைத் தொடர்ந்து, அவருக்கு சுகாதார அமைச்சு அபராத அறிவிக்கையை வழங்கியுள்ளது.
அச்சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அவர், அதன் அபராதத்தை செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
----------
வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு, உள்ளூர் சந்தையில் காய்கறிகளின் விலை அடுத்த மார்ச் மாதத்தில் சீரான நிலைக்கு திரும்பலாம் என விவசாய உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் Mohamad Sabu தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் நிச்சயமற்ற வானிலையால், காய்கறிகள் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருவதாக அவர் கூறினார்.
---------
பேராசிரியர் மாணவர்களிடம் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்த விவகாரத்தை, மலாயா பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது அதன் தொடர்பில் கூடுதல் விவரங்களை அது வெளியிடயில்லை.
---------
தெரெங்கானு மலேசிய பலகலைக்கழகத்தின் தங்கும் விடுதியில், மாணவர் ஒருவரை, பலமான காயங்கள் ஏற்படும் அளவுக்கு பகடிவதை செய்ததாகக் கூறப்படும், அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
--------
தலைநகர் Jalan Klang Lama-வில் தனது வளர்ப்புப் பூனையை, கழுத்தில் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்ற நபருக்கு, செஷன்ஸ் நீதிமன்றம் பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather